Google   www kalachuvadu.com

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

கனடாவில், லாப நோக்கமற்ற இயக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வுசெய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் நடைபெறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது.

விண்ணப்ப படிவத்தை www.kalachuvadu.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 31 ஒக்டோபர் 2009க்கு முன்னர் கிடைக்கும்படி அஞ்சல் மூலம் அனுப்பவும். மின்னஞ்சல் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.

Nominations for Iyal Virudhu
c/o Chelva Kanaganayagam
Trinity College 6, Hoskin Avenue University of Toronto,
Toronto, ON M5S 1H8 Canada

உள்ளடக்கம்