|

குமுதம், தீராநதி பிப்ரவரி (2008) இதழில் வெளியான ‘யாசகம்’ என்ற சிறுகதைக்காக
2008ஆம் ஆண்டின் இலக்கியச் சிந்தனை விருது களந்தை பீர்முகம்மதுவுக்கு
வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14, 2009இல் சென்னை, ஏவி.எம். ராஜேஸ்வரி அரங்கத்தில்
நடைபெற்ற விழாவில் இவ்விருதை அவருக்கு கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌஸோ
வழங்கினார். ‘யாசகம்’ சிறுகதையைத் தேர்வுசெய்தவர் கலை, இலக்கிய விமர்சகர் சாருகேசி.
பீர்முகம்மது 1983இல் எழுதி, தாமரையில் வெளியான முதல் சிறுகதை ‘தயவுசெய்து . . .’
அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக நீல.பத்மநாபனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இலக்கியச்
சிந்தனை விருது பெற்றது. சரியாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இலக்கியச் சிந்தனை
விருது பெற்றிருக்கும் களந்தை பீர்முகம்மதுவுக்குக் காலச்சுவடு தனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறது. |