நேற்றைப் போலிருக்கிறது
ஐம்பதைத் தாண்டியது
இன்றோ அறுபதில்
‘சென்றதினி மீளாது. . .’
என்றாலும் திரும்பிப் பார்க்கிறேன்
சாணேற முழம் சறுக்கிய
கதையாய்
நின்ற நிலையில்
என் பயணம்
அயர்வுடன் முன்னோக்கினால்
சகபயணிகளோ வெகுதொலைவில்
பின்பயணிகளும் கடந்தவண்ணம்
ஒரு துளி மேகமில்லை
ஒரு சிறு பறவையில்லை
வெறுமையாய் வானம்
அடியெடுத்து வைப்பதா
அமர்ந்தோய்வு கொள்வதா?
‘தாத்தா . . .’
குரல் கேட்டுத் திரும்பினால்
பனித்துளி தங்கு
பூவிதழ்ச் சிரிப்பில்
பவன்-அவன்
குறுநடை தொடர்ந்தேன்
பறவையின் சிறகசைப்பில்
வான்வெளி துலங்கிற்றுநன்றி: குமுதம் தீராநதி, செப்டம்பர், 2008 |