தமிழக நவீன ஓவியக் கலைஞர்களின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரான ஏ.பி. சந்தானராஜ்
(77) சென்னையில் 25.05.2009 அன்று காலமானார். டி.பி. ராய் சௌத்திரி, கே.சி.எஸ்.
பணிக்கர் போன்ற பெரும் கலைஞர்களின் வழிகாட்டுதலில் சென்னை கலை கைவினைக் கல்லூரியில்
பயின்ற இவர் பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராகவும் 1985-90 காலப்பகுதியில் கல்லூரி
முதல்வரா கவும் பணியாற்றினார். 1976-78 ஆண்டுகளில் திருவனந்தபுரம் ஓவிய சிற்பக்
கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்தார். மாநில, தேசிய, சர்வதேசிய அளவில்
நடைபெற்ற கண்காட்சிகளில் சந்தானராஜின் ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மாநில,
மத்திய அரசுகளின் விருதுகளும் கலைமாமணி விருதும் பெற்றவரான சந்தானராஜ் தமிழக ஓவியக்
கலை வரலாற்றில் புதிய போக்குகளை உருவாக்கியவர்களில் ஒருவர். புதிய ஓவியக் கலைஞர்களை
ஊக்குவித்து நவீன ஓவியம் பற்றிய புரிந்துணர்வுக்கு வழியமைத்தவர்களில்
முதன்மையானவரான இவர் சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சந்தான ராஜின்
மறைவுக்குக் காலச்சுவடு தன் அஞ்சலியை செலுத்துகிறது. |