Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 114, ஜூன் 2009

 
 
 

கட்டுரை:
ஓட்டுப் பண்ணை 2009

கண்ணன்
குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கும் கழகத்தின் ஊழல் கண்மணிகளுக்கும் இடம் கேட்டுக் கருணாநிதி தில்லியில் மன்றாடிய காட்சியைப் பார்த்து இந்தியா எள்ளி நகையாடியது. சுதந்திர இந்தியாவில் தமிழனின் சுயமரியாதையைக் கருணாநிதியின் குடும்பத்தைப் போல எவரும் சீரழித்தது இல்லை.

கட்டுரை:
நாடாளுமன்றத் தேர்தல்: சாதியும் இனமும்

ஸ்டாலின் ராஜாங்கம்
தலித் வாக்குவங்கி என்ற ஒன்று உள்ளதா? அது திரட்டப்பட்டுள்ளதா?. வட மாவட்டங்களில் ஓரளவு திரட்டப்பட்டுள்ள அவ்வாக்குகள் பிற பகுதிகளில் வெளிப்படையாக “இன்ன நிலையில் உள்ளது” என்று சொல்ல முடியாமல் உள்ளது.

கட்டுரை
அரச வன்முறையும்
ஊடக வன்முறையும்

பா. செயப்பிரகாசம்
ஜனநாயகம் குறித்த திமுகவின் பார்வை இரட்டைத் தன்மை கொண்டது. எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின் புரவலனாக இருந்து குரல்கொடுக்கும் திமுக, ஆளும் கட்சியாக மாறும்பொழுது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி அதை நசுக்க முயல்கிறது.

கட்டுரை:
வரலாற்றின் இடிபாடுகளிலிருந்து மீண்டெழுவோமா?

சங்கரன் சித்தார்த்தன்
இந்திய அமைதிப் படை என்கிற பெயரிலான தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கெதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டமும் அதைத் தலைமையேற்று நடத்திய விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையின் விட்டுக்கொடுக்காத பிரதிநிதிகள் ஆனார்கள். அது பிரபாகரனை மொத்த விடுதலைப் போராட்டத்துக்கான ஒரு குறியீடாக ஆக்கிவிட்டிருக்கிறது.

கட்டுரை:
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் ...

நாகார்ஜுனன்
இலங்கை அரசு விடுதலைப்புலிகளை ராணுவரீதியாகத் தோற்கடித்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல்-அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலைத் தொடங்க அதற்குப் பெரிதும் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

கவிதைகள்:
சுகுமாரன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்




சிறுகதை
அருகில் வந்த கடல்

குலசேகரன்
ஓவியங்கள்: செ. சீனிவாசன்

எக்காலத்திலும் அடைய முடியாதென நினைத்த அவள் உண்மையாகவே அவன் கைகளுக்குள் நிறைந்திருந்தாள். இத்தனை நாட்களாக அவள் கடலின் அடியாழத்தில் முத்துக்களோடும் பவளங்களோடும் உறைந்திருந்திருக்கலாம். அவன் இதற்காகவே பல பிறவிகளாகக் கடற்கரையில் காத்திருந்திருக்கிறான் போலும்...

கட்டுரை: சரஸ்வதி கலாச்சாரமும் சிந்துவெளி நாகரிகமும்
சு.கி. ஜெயகரன்
வேதங்கள், புராணங்களால் மட்டுமே அறியப்படும் சரஸ்வதியாறு பூமிக்கடியில் ஓடுவதாக நம்பும் மரபு ஒன்றும் உள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் சரஸ்வதி ஆறு ஓடியிருந்திருந்தால் அதற்கான புவியியல் ஆதாரங்கள் இருக்க வேண்டுமே?

கட்டுரை:
லெவி ஸ்ட்றோஸின் வரலாற்றுப் பின்புலம்
சமூக அறிவியலும் சமுதாயமும்

வி. சுஜாதா
மற்ற மானுடவியலாளர்களைப் போல லெவி ஸ்ட்றோஸ் பழங்குடிகளை இழிவாகப் பார்க்கவில்லைதான்; பழங்குடிகளின் சமூக, கலை அறிவின் சிறப்பை அவர் எடுத்துக்காட்டினார் என்பதும் உண்மைதான். எனினும் அவரது அமைப்பியல்வாதம் பழங்குடிகள் பற்றிய ஐரோப்பிய மையச் சிந்தனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்ல.

பத்தி: வேறுவேறு
கல்வித் தொழிலின் வெற்றிச் சூத்திரம்

பெருமாள்முருகன்
பணம் உள்ள கனவான்களுக்குத் தம் பிள்ளை புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதும் படிப்புக்காக லட்சக்கணக்கில் செலவுசெய்வதும் கௌரவம் சார்ந்த விஷயம். ஆனால் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் இந்த நாமக்கல் பள்ளி மோகத்தில் சிக்கி மிகவும் துயரப்படுகிறார்கள். இப்பள்ளிகளின் வியாபாரச் சூத்திரம் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை.

கட்டுரை:
ஒபாமாவின் நூறு நாட்கள்

க. திருநாவுக்கரசு
ஒரு தனிமனிதர் என்னும் அளவில் ஒபாமா மென்மையானவர், நாகரிகமானவர், கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர், சமூக விவகாரங்களில் (பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்களில் அல்ல) முற்போக்கானவர். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருந்தபோதும் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியிலும் அவரது பல நற்பண்புகள்...

கட்டுரைத் தொடர்:
பசுமைப் புரட்சியின் கதை
உணவு நெருக்கடி என்னும் மாயை

சங்கீதா ஸ்ரீராம்
பொதுச் சட்டம் 480இன் குறிக்கோள், நமது வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை விரிவாக்குவதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்கி, நாமும் நம் மக்களும் பயனுற வேண்டும்; மற்ற நாடுகளின் மக்களும் பயனுற வேண்டும் என்பதுதான் என்று அத்திட்டத்தின் முக்கிய (சுயநலக்) குறிக்கோளைத் தெள்ளத் தெளிவாகக் கூறினார் ஜனாதிபதி ஐசன்ஹோவர்.

அஞ்சலி:
அகஸ்தோ போவால் (1931-2009)
வானவில் வேட்கை: விடுதலைக்கான அழகியல்

சண்முகராஜா

மதிப்புரை: நிசி அகவல்
ஞானக்கூத்தன்

பதிவுகள்: லண்டன் புத்தகக் கண்காட்சி
மு. புஷ்பராஜன்

பதிவுகள்:
அற்றைத் திங்கள், ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கம்

அ. கார்த்திகேயன்

பதிவுகள்:
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள்

வெங்கட்ரமணன்

தலையங்கம்

கடிதங்கள்