|
கட்டுரை: இந்துத்துவ நாயகர்களை உருவாக்குவது எப்படி? - ஒரு மதச்சார்பற்ற செயல்திட்டம்
கண்ணன்
வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளமை தெளிவு. இப்பேச்சு சுமார் 500 அல்லது 1000 மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. பேசிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அதன் ஒளிப்பதிவு ‘செக்குலர்’ ஆங்கில ஊடகங்களின் கையில் சிக்கி ‘தேசிய’ச் செய்தியாக மாறியது.
கட்டுரை: முக்தார் மாய் - பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பிம்பம்
கவிதா
பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 37 வயது முக்தார் மாய் 2002இல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு (gang-rape).
சிறுகதை: அமெரிக்கக்காரி
அ. முத்துலிங்கம்
சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், ‘நான் அமெரிக்கக்காரியா?’ தாய் சொல்வார், ‘இல்லை, நீ இலங்கைக்காரி.’ ‘அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?’ ‘அது முடியாது.’ ‘நான் அமெரிக்காவுக்குப் போனால் ஆக முடியுமா?’ ‘இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.’
கவிதைகள்:
குவளைக் கண்ணன் இரா. சின்னசாமி சக்தி ஜோதி
சிறுகதை: வருகை
கே. என். செந்தில் ஓவியங்கள்: பொன்வண்ணன்
“ங்ஙோத்தா... கான்ட்ரேக்ட் தாயோளி. டேய்... சுண்டக்கா சைஸ் இருக்குமாடா உன்னோடது. நானு மிஷினேறித் தைக்கவந்து பதினஞ்சு வருஷங்கழிச்சுத் தாண்டா நீயி உங்கம்மாவோட கால்வழியா வந்திருப்ப ... நாந் தைச்ச பீஸ மிஸ்டேக்குங்குறயா திருட்டுத் தேவிடியாப்பையா டேய்...”
பத்தி: வேறுவேறு பொம்மைகள் வசிக்கும் உலகம்
பெருமாள்முருகன்
ஆணும் பெண்ணும் பேசக் கூடாது என்னும் கட்டுப்பாட்டைச் சிறுவயதிலேயே கடுமையாக அமலாக்கும் பள்ளிகள் அனேகம். சிறுவயதில் பிரித்துவிட்டால் பதின்வயதில் ஏற்படும் ‘ஒழுக்கக் கேடுகளை’ முன்கூட்டியே தடுத்துவிடலாம் என்பது கணக்கு. ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனி விடுதி என்பதன் நோக்கமும் இதைத்தான் மையமாகக் கொண்டிருக்கிறது.
கட்டுரை: மயக்கங்களிலிருந்து விடுபட்ட சங்கீதம்
ப. ரவிகுமார் தமிழாக்கம்: மா. தக்ஷிணாமூர்த்தி
நவீனத் தலைமுறையில் இசையை ஆன்ம வெளிப் பாடாகக் கருதும் ஒரே ஒரு பாடகர் மட்டுமே இருக்கிறார் - சஞ்சய் சுப்ரமணியன். எந்த சமரசத்துக்கும் தயாராகாமல் சஞ்சய் தன்னுடைய வழியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். சஞ்சயின் அர்ப்பண மனோபாவத்தை இன்றைய எந்தப் பாடகரிடமும் காண்பதற்கில்லை.
|
கட்டுரை: யாழ்ப்பாணக் குறிப்பேடு
அநாமதேயன்
ஒவ்வொரு நாளும் கண்டு சகிக்க முடியாத படங்களுடன் யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று தினங்கள் இவற்றைத் தொடர்ந்து வாசித்ததில் சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை. கனவில்கூடப் படுக்கை விரிப்புகளிலும் சாக்குகளிலும் கூழாகிப்போன பிரேதங்கள் அள்ளப்படும் காட்சிகளே தொடர்ந்து வருகின்றன.
பத்தி: இங்கிலாந்து மறு பார்வை ஈழப் போர்: மாறுபட்ட கட்டம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
9/11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்பு தெய்வீக ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. விடுதலை, சுயநிர்ணயம், சுயாட்சி போன்ற கோரிக்கைகளை எழுப்பும் குரல்கள் அனைத்தும் தேசம் என்னும் கட்டமைப்பைச் சிதறடிக்கும் தீவிரவாதக் குழுக்களாக வர்ணம் பூசப்பட்டிருக்கின்றன.
நேர்காணல்:
பிரான்சிஸ் ஜெயபதி சே. ச குடிநோய்: ஒரு கலாச்சாரப் பிரச்சினை
சந்திப்பு: சண்முகராஜா, சச்சிதானந்த வளன்
எப்பொழுது குடி அத்தியாவசியத் தேவையாக மாறுகிறதோ அப்போது குடி ஒரு நோயாக மாறுகிறது. குடித்தால்தான் காலையில் எழ முடியும்; குடித்தால்தான் சாப்பிட முடியும்; குடித்தால்தான் எந்த வேலையையும் செய்ய முடியும் என்ற நிலை.
எதிர்வினை:
யோ. திருவள்ளுவர் சாவித்திரி மலர்மன்னன்
திறந்தவெளி: எதிர்ப்பில் முகிழ்க்கும் பண்பாடு
பா. செயப்பிரகாசம்
மாணவர்கள் சமூக மனிதனாகத் தம்மை உணரும் காலம் வந்து சேர்ந்திருக்கிறது. சுயமரியாதையும் சுயசிந்தனையும் உள்ள சமூக மனிதனாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள்.
அஞ்சலி: சி. மணி (3.10.1936 - 5.4.2009) சி. மணி அறிமுகப்படுத்திய நாடகவெளி
ந. முத்துசாமி
பதிவுகள்
மீண்டும் காகங்கள், 7.3.2009, நாகர்கோவில்
மா. சுப்பிரமணியம்
ஈழத் தமிழின அழிப்புக்கெதிரான பெண்கள் அமைப்பின் உண்ணாநிலைப் போராட்டம்
ந. கவிதா
இருளர்களின் திருவிழா
ஓவியர் கு. கலைச்செல்வன்
மதிப்புரை
எழுதுவினைஞனின் டயறி
மு. புஷ்பராஜன்
சென்னைக்கு வந்தேன்
செல்லப்பா
விவாதம்: நாட்டுடமையாக்கம் எனும் சொட்டு மருந்து
கண்ணன்
தலையங்கம்
கண்ணோட்டம்
கடிதங்கள்
|