|
சென்ற ஆண்டுமுதல் தமிழுக்குச் சிறப்பான பங்களிப்புச்செய்த படைப்பாளுமைகளுக்கு
பபாசி 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொற்கிழியும் சான்றிதழும் கொண்ட விருதுகளை
வழங்கிச் சிறப்பித்துவருகிறது. 32வது சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி
கீழ்க்கண்ட படைப்பாளிகளுக்கு இந்த ஆண்டு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சி. மணி - கவிதை
ஆர். சூடாமணி - சிறுகதை, நாவல்
ந. முத்துசாமி - நாடகம்
கே. நெடுஞ்செழியன் - உரைநடை
கிரீஸ் கர்னாட் - கன்னட இலக்கியம்
எஸ். முத்தையா - ஆங்கில இலக்கியம்
தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான, தத்தம் துறைகளில் சாதனை புரிந்துள்ள
இப்படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிய பபாசி அமைப்பாளர்களுக்கும் தேர்வுக்
குழுவினருக்கும் ‘காலச்சுவடு’ தன் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
பொதுவாகத் தகுதியானவர்களுக்கும் விருதுகளுக்கும் இடையே தென்படும் இடைவெளி இந்த
விருதுகளில் இல்லை என்பது தமிழுக்கு ஓர் நற்செய்தி. படைப்பாளிகளை வாழ்த்துகிறோம்.
|