Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 110, பிப்ரவரி 2009

     

கட்டுரை:
நாலு வார்த்தை பேச விடு; எழுத விடு!

சேரன் | மகிந்த ராஜபக்சவின் அரசில் ஊடகவியலாளர் களின் சுதந்திரம் ஒட்டு மொத்தமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. நேரடியான தணிக்கைமுறை பெருமளவுக்கு இல்லாவிட்டாலும் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் நேரடியாகவே எச்சரிப்பது, அச்சமூட்டுவது ஆகிய நடவடிக்கைகளால் ஊடகத் துறைக்குப் பெரும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

கட்டுரை:
பிரசுரித்துப் பாழாய்ப் போனவர்களின் வரலாறு

சிவநம்பி சண்முகன் | இன்றைய நிலையில் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி அடிக்கிற வேலையை ஊக்கமுடன் செய்துவருவது மகிந்த ராஜபக்சவின் அரசாகும்.

நேர்காணல்: சுனந்தா தேசப்ரியா
“ஒரே ஒரு உண்மை தான் இருக்க முடியும்”

சந்திப்பு: கவிதா | இலங்கையின் ஊடகத் துறை இப்போது எதிர் கொண்டிருப்பது போன்ற ஒரு மோசமான சூழலை முன்னெப்போதும் சந்தித்ததில்லை என்றுதான் கருதுகிறேன். 1981இலிருந்து போர் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல சமயங்களில் தணிக்கை முறையுங்கூட இருந்துவந்திருக்கிறது. ஆனால் இப்போது இருப்பதைப் போன்ற அதிகாரபூர்வமற்ற ஒரு தணிக்கை எப்போதும் இருந்ததில்லை.

கட்டுரை: 'பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்...'
லசந்தா விக்ரமதுங்கே
தமிழில்: கவிதா
| என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். காவல் துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை.

சிறுகதை:
கண்ணீர் தேசம்

தி. மயூரன் | “அப்படியில்லை சிவம். உனக்குக் கனடா போகிற வசதியிருக்குப் போறாய். நாங்கள் என்ன செய்யிறது? எல்லாரும் இப்படி எடுத்ததுக்கெல்லாம் ஊரைவிட்டு ஓடினால் வசதியில்லாத சனம் என்ன செய்யிறது?”

சிறுகதை:
நாடக தினம்

அசோகமித்திரன் | அவருக்கு வாழ்க்கையில் பிடிக்காதது இந்த ஹீரோயினி, ஹீரோயினி என்று சொல்வது. ஆனால் நாடகத் துறையில் இருந்த வர்கள் எல்லாருமே அப்படித்தான் சொன்னார்கள்.

கட்டுரை:
தோத்தமஸின் கனவில் ஸ்பின்ஸ் கூறிய வாசகம்
எகிப்துப் பயணக் கட்டுரை

பி. ஏ. கிருஷ்ணன் | சங்க காலத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பிரமிடு பார்ப்பவர்களிடம் வியப்பை வரவழைப்பதில் ஆச்சரியமே இல்லை. இந்த வியப்பே பலரைப் பலவிதமாகப் பேச, இயங்கவைக்கிறது. பிரமிடு உலகத்தின் மையத்தில் இருக்கிறது எனச் சொல்பவர்கள் இன்றும் இருக் கிறார்கள். அது விண்வெளி மனிதர்களால் கட்டப் பட்டவை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களுக்கு ‘சங்கீத நாடக அகாடமி’ விருது

தமிழுக்கு ஓர் நற்செய்தி

வியப்புக்குரிய பெண் மாயா ஏஞ்சலோ

கவிதைகள்
மாயா ஏஞ்சலோ
தமிழில்: குவளைக் கண்ணன்
| எனது கவர்ச்சி உன்னை நிலைகுலைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில் வைரங்கள் வைத்திருப்பதைப் போல் நான் நடனமாடுவது சட்டென அதிர்ச்சியடைய வைக்கிறதா?

கட்டுரை:
பாடத்திட்ட நத்தை

பெருமாள்முருகன் | பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்? உற்சாகம் ஊட்டக் கூடாது. மகிழ்ச்சி தரக் கூடாது. சமகாலத்தை அறிவிக்கக் கூடாது. பிரித்தால் தூக்கம் வரவழைக்கும் ஒழுக்க விதிகள் அச்சிட்ட நூலாகத்தான் இருக்க வேண்டும். அதாவது மொன்னையாக இருக்க வேண்டும்.

பசுமைப் புரட்சியின் கதை:
சுதந்திர இந்தியாவில் வேளாண்மை (1947-60)

சங்கீதாஸ்ரீராம் | மனிதனுக்குப் போதை தரும் கஞ்சா, அபினி, சாராய வகைகளைப் போல இந்தச் செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள்.

அஞ்சலி:
கமில் ஸ்வெலபில்

ஆ.இரா. வேங்கடாசலபதி | சென்ற ஜனவரி 17ஆம் நாள் மறைந்த கமில் ஸ்வெலபில் இருபதாம் நூற்றாண்டுப் பிற்பகுதியின் தலைசிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் பிற திராவிட மொழிகளிலும் நல்ல பயிற்சி கொண்டிருந்தவர். வடமொழி, செக் மற்றும் பிற செவ்வியல் மொழிகளும் அறிந்தவர்.

மதிப்புரை:
காவல் கோட்டம்

ஆ.இரா. வேங்கடாசலபதி | ‘காவல் கோட்டம்’ என்ற நல்ல நாவலை மகத்தான நாவல் என்று உடனே அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்குச் சில தடைகள் இல்லாமலில்லை.

பதிவு:
புத்தகச் சந்தைக்குப் போனேன்
சென்னைப் புத்தகத் திருவிழா

தேவிபாரதி | ஜோ மல்லூரி. அவர் ஒரு கவிஞர் என்று நினைக்கிறேன். 1500 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்த மல்லூரி, அதைக் காட்சிக்கு வைப்பதற்காக இரண்டு கடைகள் அடங்கிய பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்திருந்தார்.

நீங்கள் கவிஞர் சுகுமாரன்தானே?
சுகுமாரன் | க்ராஸ் பேனாவை இழந்த வருத்தத்தைவிட ஒரு வாசகரை இழந்த வருத்தம் மிக அதிகம்.

ஆவணமாக்கப்பட வேண்டிய நிகழ்வு
கடற்கரய் | முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றி எத்தனை பதிவுகள் நம்மிடையே எழுதப்பட்டிருக்கின்றன?

பணவீக்கம் குறைந்தது, பஜ்ஜி விலை உயர்ந்தது!
கே. முரளிதரன் | தமிழினி பதிப்பகத்தில் சு. வெங்கடேசனின் 1000 பக்க காவல் கோட்டம் நாவல் வாங்கியவர்களுக்குப் பழைய இலக்கியவாதி மாடல் தோள் பை ஒன்று இலவசமாகக் கிடைத்தது.

விட்டுவிட்டு வந்த புத்தகங்கள்
கே.என். செந்தில் | வாங்கியவை மனநிறைவு தந்தாலும், முடியாமல் விட்டுவந்தவை ஏக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

தலையங்கம்

கடிதங்கள்

அம்பைக்கு இயல் விருது