Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 109, ஜனவரி 2009

     

கட்டுரை:
பயங்கரவாதத்தின் எளிமை

தேவிபாரதி | நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட பயங்கரவாதத்திற் கெதிரான சட்டத் திருத்தம், புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்பு போன்ற அரசின் ‘கடுமை’யான நடவடிக்கைகளால் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்பதை யாராவது நம்பிக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

கட்டுரை: சில தேதிகளும் சில பயங்கரங்களும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா | இன்றைய மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் 9/11 காயப்பட்டவர்களின் கௌரவச் சின்னமல்ல. இந்தக் கறை படிந்த முத்திரை இந்தியாவிற்குத் தேவையில்லை.

கட்டுரை: முகம் திருப்பிக்கொள்ளாத நட்பு
களந்தை பீர்முகம்மது | இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒன்றும் இரகசியமானதல்ல. அதே சமயத்தில் முஸ்லிம் சமுதாயம் அதை விரும்பவுமில்லை. பல பயங்கரவாதங்களை எதிர்க்கும் சூழலில் தலைதூக்கியது. இஸ்லாமியப் பயங்கரவாதம் அதன் சொந்த விருப்பமின்றியே உருவாக்கவும்பட்டது.

கடிதம்: இந்த முறை முடியாது
அம்பை | இந்தப் போரை மும்பாய் எளிதில் மறக்க முடியாது; மறக்கக் கூடாது. நாம் ஓட்டுப்போட்டதால் தலைவர்களாக உள்ளவர்களை இனிமேல் நிம்மதியாகத் தூங்கவிடக் கூடாது. அந்த ரத்தமும் குண்டு வெடிப்பும் நம் மனத்தில் அழியாத சித்திரங்களாக மாற வேண்டும்.

கட்டுரை:
அமெரிக்கா என்ற கருத்து

பெர்னார்ட் பேட்
தமிழில்: தி.அ. ஸ்ரீனிவாசன்
| ஒபாமா இப்போது ஒரு நாட்டின் அதிபராக, முதல் குடிமகனாக நிற்பதுபோலவே தங்களின் விடுதலைக்காகப் போராடிய ஆப்பிரிக்க அமெரிக்க மக்களும் இப்போது அமெரிக்க மக்களாகி உள்ளனர். அவர்களின் போராட்டம் அனைத்து மக்களின் போராட்டமாக மாறுகிறது.

கட்டுரை:
பாராக் ஒபாமா: பின்-இன (post- racial) மனிதர்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா | ஜெஸ்ஸீ ஜெக்சாஸன் இல்லாவிட்டால் இன்று ஒபாமா ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. இரண்டுதடவை 1984, 1988 ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் போட்டியில் ஜெஸ்ஸீ தோற்றுப்போனவர். எண்பதுகளில் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரைத் தெரிவுசெய்யும் துணிவு இருக்கவில்லை.

சிறுகதை: பகலில் மறையும் வீடு
எஸ். செந்தில்குமார் | சின்னப் பொண்ணுடைய நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நிலக் காட்சிகளின் அபூர்வத் தன்மையையும் விசித்திர மனிதர்களையும் பற்றிக் குறிப்பெடுக்கவென அலைந்து திரிந்தான் கீல்வென்.

கவிதைகள்:
கடற்கரய்

சிறுகதை:
மலையும் மலை சார்ந்த வாழ்வும்

அரவிந்தன் | உடலில் இயக்கமற்று இருக்கும் போதும் உள்ளுக்குள் ஓராயிரம் அசைவுகள், பதற்றங்கள், உத்வேகங்கள். மலைகளைப் போல அசையா மனது என்று வாய்க்கும்? இந்தச் சலனங்கள் எதுவும் தேவையில்லை என்று மலை ஒவ்வொரு முறையும் கூறுகிறது.

ஆதிமுலம் நிரப்பப்பட முடியாத வெற்றிடம்
எந்தவொரு இதழுக்கும் பயன்படுத்திக்கொள்ளத்தக்க அற்புதமான பல ஓவியங்களை அவர் நமக்காக விட்டுச்சென்றுள்ளார். எனினும் அவரது இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் படைப்பு சார்ந்தது மட்டுமன்று. நம்மில் பலருக்கும் அவர் ஒரு வழிகாட்டியாகவும் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர்.

கட்டுரை: இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்
பா. செயப்பிரகாசம் | தமிழீழப் பிரச்சினையை இந்தியா தீர்த்துவைக்கப் போவதில்லை. தீர்த்துவைப்பதும் இந்திய ஆதிக்க சக்திகளின் நலனுக்கு உகந்ததல்ல.

கட்டுரை:
சேதுக் கால்வாய்: பரிதவிக்கும் மீனவர்கள்

வறீதையா கான்ஸ்தந்தின் | சேது அரசியலுக்கு வெளியே நின்று பார்க்கும் போது உயிர்ப் பன்மய வளம், சூழலியல் வளம், சூழலியல் சேவை, மீன்வளம், பாரம்பரிய மீனவரின் எதிர்காலம் - எல்லாவற்றிலும் சேதுக் கால்வாய் பாதகமான திட்டம் என்பதுதான் பரந்துபட்ட கருத்தாக எழுகிறது.

கட்டுரை:
உங்கள் புத்தர் இதையா சொன்னார்?

கவிதா | “இங்கே சம்பளம், சலுகைகள் எல்லாம் கிடைப்பது உண்மைதான். ஆனால் வாழ்தல் பற்றிய பயம் இருக்கிறது. இப்போது எதுவும் நடக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”

கட்டுரை:
மிரியம் மக்கேபா (1932-2008) போலே போலே மாமா ஆப்பிரிக்கா

சு. கி. ஜெயகரன் | மக்கேபா பாடிய பாடல்கள் சமூக வேட்கை மிகுந்த, வலுவான, உயிர்த்துடிப்புள்ள பாடல்கள். மக்கேபாவின் பாடல்களில் தீண்டப் படாதவர்கள்போல ஒதுக்கிவைக்கப்பட்ட தெற்காப் பிரிக்கர்களின் கோபமும் தாபமும் வேதனைகளும் இழையோடின.

கட்டுரை:
பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொழிபெயர்ப்புப் பணிகள்: ஒரு பார்வை

தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றித் தீர்க்கமான பார்வையின்றி, குழப்பமான, மேம்போக்கான கருத்தாக்கங்களே நிலவிவந்த காலகட்டத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெளிவான, இலக்கியப் பிரக்ஞை கொண்ட பார்வையை முன்வைத்தவர் எனப் புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும்.

கட்டுரை:
பெரியார் கட்டுரையின் கதி

பெருமாள்முருகன் | பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரைகள் சில உள்ளன. இறந்தவர் பற்றிய அனுதாபம் ஏற்படும் வகையில் இரங்கல் கட்டுரை எழுதுவதுதான் மரபு. பெரியார் இயல்பாகவே இந்த மரபுக்கு எதிரானவர். அவர் எழுதியுள்ள இரங்கல் கட்டுரைகள் சிலவற்றை வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே படிக்கலாம்.

கட்டுரை:
அறியப்பட வேண்டிய அண்ணா

மலர்மன்னன் | அண்ணா தம்மை ‘சாமானியன்’ என்று சொல்லிக்கொள்வதுதான் வழக்கமேயன்றி, ‘சூத்திரன்’ என்று சொல்லிக்கொண்டதில்லை. அது ஹிந்து சமூகத்தை இரு துண்டு களாகப் பிளவுபடுத்துவதாகும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அஞ்சலி:
மண்ணின் சாரம் செறிந்த கவிஞர் : தா. இராமலிங்கம் (16.08.1933 - 05.10.2008)

மு. புஷ்பராஜன் | வாழ்ந்த மண்ணின் சாயலை, அன்றாடம் நம் வாழ்வோடு கூடவரும் அல்லது எதிர்கொள்ளும் அற்பச் சிறு நிகழ்வுகள், அவை நம் கவனத்தைக் கோராமல் நழுவிச் செல்பவையாகக்கூட இருக்கலாம். அவை தா. இராமலிங்கம் என்று கவியின் கண்களால் கவனம் கொள்ளப்பட்டு, அவர் கவிதைகளுக்குப் புதிய வேகத்தையும் அர்த்தத்தினையும் கொடுக்கின்றன.

மதிப்புரை:
வழித்தடங்கள்

மு. காளிதாஸ்

மதிப்புரை:
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

செல்லப்பா

பதிவு:
‘மீண்டும் காகங்கள்’ - அறிவியல் அறிஞர் ஒய்.எஸ். ராஜன்

மா. சுப்பிரமணியன்

பதிவு:
அ.கா. பெருமாளுக்கு அறுபது

மா. சுப்பிரமணியன்

பதிவு:
கவிஞர்களின் கவிதைப்போர்

சு.மு. அகமது

தலையங்கம்

கண்ணோட்டம்

கடிதங்கள்

எதிர்வினை