|
கட்டுரை:
நிதிச் சந்தை: சிதறுண்ட முதலாளித்துவக் கற்பனைகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா |
சந்தையின் வளர்ச்சிக்கு அரசின் குறுக்கீடு தடங்கலாக இருக்கிறது என்ற சுதந்திரச் சந்தை ஆதரவாளர்கள் இப்போது அதே அரசின் தலையீட்டை எதிர்பார்க்கிறார்கள். தேசியமயமாக்கல் ஒரு கெட்ட வார்த்தை என்று எண்ணியவர்களின் கண்ணுக்கு முன்னாலேயே வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மறைமுகமாக அரசின் உடமைக்குள்ளாகியிருக்கின்றன.
அகவிழி திறந்து:
மாற்றுப் பதிப்பகம்: பிரிக்க முடியாத மதிப்பீடுகள்
கண்ணன் |
எடிட்டிங் வழி மொழி பயன்பெறுகிறது. அதில் கலக்கும் மாசு குறைகிறது. நடை கூர்மைப்படுகிறது. பதிப்பகமும் பயன்பெறுகிறது. முதலில் நன்றாக எடிட் செய்யப்பட்ட பிரதி ஏற்படுத்தும் மனநிறைவு. இரண்டாவதாக எழுத்தாளனுக்கும் பதிப்பகத்திற்குமான உறவு வலுப் பெறுகிறது. ஒருமுறை எடிட்டிங்கின் சிறப்பை ருசித்துவிட்ட எழுத்தாளன் அதை மறப்பதில்லை, மறுப்பதுமில்லை.
சிறுகதை: பழுப்புக் காலை ஃப்ராங்க் பாவ்லாஃப்
ஃப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்: திரிதப்ரத்தா பட்டாச்சார்யா 'டேடோ '
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆனந்தராஜ்
|
'சிட்டி டெய்லி'யைப் போன்ற குழுவினரின் பதிப்பகங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவை பதிப்பித்த நூல்கள் நூலக அடுக்குகளிலிருந்து நீக்கப்பட்டன. அந்தப் புத்தகங்களை நாம் கவனமாகப் படித்தால், ஒவ்வொரு நூலிலும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது நாய் அல்லது பூனை என்ற வார்த்தை பழுப்பு என்ற முன்னொட்டு இல்லாமல் இடம் பெற்றிருக்கும் என்ற உண்மையை அறியலாம்.
கவிதைகள்- ஓவியங்கள்:
எம். யுவன்,
இரா. சின்னசாமி
சிறுகதை :
தாழ்ப்பாள்களின் அவசியம்
அ. முத்துலிங்கம் |
அம்மா திரும்பிப்போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. எவ்வளவு ஆர்வத்துடன் என்னைப் பார்க்க 10,000 மைல் தூரம் கடந்து வந்தாரோ அந்த ஆர்வம் எல்லாம் வடிந்து குழம்பிப்போய்த் திரும்பினார். மிகக் கடுமையாக நடந்துகொண்டுவிட்டேனோ என்று சில சமயம் நான் நினைத்ததுண்டு. ஒருநாள் அம்மா பின் தோட்டத்தில் பாவாடை காயப்போட்டதற்குப் பக்கத்துவீட்டுக்காரன் முறைப்பாடு செய்து அது பெரிய விவகாரமாகிப்போனது. அம்மாவின் கண்கள் நனைந்து பளபளத்தன.
கட்டுரை:
காவிரியின் குழந்தைகள்
அசோகமித்திரன் |
சங்கரராமின் இரு கதைகளைப் பற்றி மட்டும் கூறிவிடுகிறேன். அவர் மனித இனம் என்று நினைத்ததில் மிருகங்களுக்கும் சமபங்கு உண்டு. மிருகங்கள் பற்றி உயிரியலாளர்கள் போல் கட்டுரை எழுதிவிடலாம். ஆனால் புனைகதையில் அவற்றின் இயல்பு மாறாதபடி பாத்திரங்கள் ஆக்க முடியுமா?
கட்டுரை:
லெ க்ளேஸியோ: ஒரு புதிய மானுடத்துக்கான தேடுதல் வேட்டை
நாகரத்தினம் கிருஷ்ணா |
நோபெல் பரிசுத் தேர்வுக் குழுவினர் கடந்த அக்டோ பர் மாதம் லெ க்ளேஸியாவை இலக்கியப் பரிசுக்கெனத் தேர்ந்தெடுத்தபோது, "இன்றைய மனிதகுலப் பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு புதிய மானுடத்திற்கான தேடுதல் வேட்டையில் கவித்துவத் துணிச்சலும் உணர்ச்சிக் களிப்பும் ஒருங்கே அமைந்த படைப்பாளி" எனப் புகழ்ந்தார்கள்.
கட்டுரை: நகல் அசலானது! ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை
எஸ். நீலகண்டன் |
ஆரம்பகாலத்தில் சேகோ ஆலை தொடங்கியவர்கள் தங்களின் தொழில்நுட்பத்தை இரகசியமாக வைத்துக்கொள்ள இயலவில்லை. ஆலைகளுக்குள் நுழைந்த எவரும் அந்தத் தொழில்நுட்பத்தை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. எனவே பல புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன.
கட்டுரை: தலித் இலக்கியம்: 2000க்கு முன்னும் பின்னும்
அ. ராமசாமி |
ஜனநாயக எல்லைக்குள் நின்று கிடைக்க வேண்டிய குடிமை உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தும் தைரியமும் பாதுகாப்புணர்வும் கிடைக்கக் காரணம் புதிய தலித் எழுச்சியின் பின்விளைவுகள்தான். கிறித்தவ மதத்திற்குள் செயல்படும் ஒதுக்கல்கள் இன்று வெளிப்படையாகப் பேசப்படுவதன் பின்னணியில் தலித் இயக்கங்கள் இருக்கின்றன.
கட்டுரை: தலித் என்னும் சொல்லாடலின் அரசியல்
அரச. முருகுபாண்டியன் |
ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களை ஒவ்வொன்றாக அழைத்துக்கொள்ளாமல் 'தலித்' என்கிற பொது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டன. அடிப்படையில் இது நிறுவனத்திற்கெதிரான கலக உணர்வைக் கொண்டது. அது சாதி இலக்கியம் அல்ல.
|
கட்டுரை:
தலித் விமர்சனம்: சில குறிப்புகள்
அழகரசன் |
அறிவுத் துறையின் பின்புலமாக, மறைமுகமாக இயங்கும் இந்தச் சாதி அதிகாரம் சில சமயம் தேசியமாகவும் வேறு சில சமயம் மாசுபடாத தூய இலக்கியத்தன்மையை முன்னிறுத்தியும் சில சமயம் மௌனமாகவும் தன்னை நிலைநாட்டிக்கொள்ளும்.
கட்டுரை:
விரிவுபெறும் பொருளும் மாறுபடும் அடையாளமும்
கி. அ. கீதா |
தலித் இலக்கியம் படிப்பதால் வாசகரின் தனித்தன்மையும் பகுத்தறிவுச் சிந்தனையும் கூர்மையடைகிறது; சமுதாயத்தில் சாதிப் பாகுபாட்டினை அழிக்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது; அதே வேளையில் இதைப் படித்தபின் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையும் மனச் சோர்வும் ஏற்படுகின்றன.
கட்டுரை:
தலித் அடையாளம்: அங்கீகாரத்தின் நிறங்கள்
ஸ்டாலின் ராஜாங்கம் |
தலித் இலக்கியம் என்பதைச் சாதி இலக்கியமாகக் கருதித் தத்தம் சாதி இலக்கியங்களுக்கான 'நியாயங்களை' உருவாக்கி இலக்கியம் படைக்கும் போக்கு உருவானது. சுயம், வட்டாரம் சார்ந்த சொல்லாடல்கள் இதற்குப் பயன்பட்டன. முன்னெப்போதையும்விடச் சாதியடையாளம் கொண்ட படைப்புகள் பெருகின.
கட்டுரை:
கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்
க.ம. தியாகராஜ் |
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு எனப் புகழ்ந்து கூறி வரவேற்கப்படும் இத்தீர்ப்பு உண்மையில் 'ஜாதிய ஒடுக்குமுறைக்கு' எதிரானதா? இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் 'சமூக நீதி' நிலைநாட்டப்பட்டு விட்டது எனக் கொண்டாட முடியுமா?
எதிர்வினை:
வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே
மு. பழனி இராகுலதாசன் |
முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது.
எதிர்வினை :
'மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டம்'
பொ. இரத்தினம், வழக்கறிஞர் மதுரை |
சில கசப்பான உண்மைகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நிகழ்வுகளைச் சரியாக அறிந்து கொண்டால்தான் மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாந்துபோவதைக் குறைக்க முடியும். துரோகங்களைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்பதை அனுபவங்கள் உணர்த்துகின்றன.
கட்டுரை:
பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம் |
நிலங்கள் சேதமடையாத விதத்தில் பயிரிட்டு, அறுவடை செய்த உணவைப் பாதுகாத்து, எல்லாருக்கும் கிடைக்கும் படி செய்தால், நம் மக்கள்தொகை அதிகமானாலும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட எத்தனையோ ஆண்டு காலமாகும்.
கட்டுரை:
ஸ்பானிஷ் செம்புலத்தில் உறங்கும் கவிஞர்
நாகார்ஜுனன் |
காலை வானில் சூரியன் தெரியவில்லை. கண்ணில் காணாத செம்புலத்தை இன்னும் உணர்ந்தேன். வீட்டிலிருந்து ரயில் நிலையம்வரை நடக்கும்போது கண்டேன், நேற்றுதிர்ந்த ரத்தச்சிவப்பு இலைகளை. இவ்வாண்டில் இறுதியாக இப்படி உதிர்வது இந்த இலைகள்தாமோ!
சு.ரா. பக்கங்கள் :
காலத்தின் கானல் - 9
மௌனியைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரிதான். ஆனால் அதையும் தாண்டி அவரைச் சந்திப்பது ஒரு அனுபவமாகவே இருக்கும். நினைவில் நீங்காது நிற்கும் அனுபவமாக, பளீரென்று தாக்கும் ஆளுமை ஒன்று அவரிடம் உண்டு.
பதிவு :
பிரான்சிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
அ.கா. பெருமாள்
பதிவு :
ஆவணப்படம், நீ யார்
பெ. பாலசுப்ரமணியன்
பதிவு :
வானவில்லின் கண்ணீர்
அருண்மொழி
மதிப்புரை :
இருளர்களின் தொலைந்துபோன பாடல்கள்
தேவிபாரதி
தலையங்கம்
முடிவின்றித் தொடரும் துயரம்
கடிதங்கள்
|