Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 106, அக்டோபர் 2008

     

கட்டுரை:
அமர்நாத்:
அரசியலாக்கப்படும் யாத்திரை

ஜி. கே. ராமசாமி | ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அறைகூவல் (முழக்கம்) இருக்கும். திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' எனவும் பழனிக்குச் செல்வோர் 'அரோகரா, அரோகரா' என்றும் சபரிமலை பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' எனவும் முழங்குவார்கள். அவையே அவர்களது பக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கும். சிவனை 'ஹர ஹர மகாதேவா' என்று அழைப்பதுதான் வழக்கம். ஆனால் அமர்நாத் யாத்திரையில் சிவன்மீதான பக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு 'பாரத் மாதா கி ஜே' என்னும் கோஷத்தால் அது அரசியலாக்கப்பட்டது.

கட்டுரை
பறையன் என்னும் சொல் மீதுள்ள பகை

ஸ்டாலின் ராஜாங்கம் | தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும் மற்ற அடித்தட்டுச் சாதிகளைவிடப் பறையர் எனப்படும் சாதியைக்கொண்டே அதிகமும் நிறுவப்பட்டுள்ளதை இச்சொல்லின் புழக்கமும் பரவலாக்கமும் காட்டுகின்றன. இவ்விரண்டு சாதியினரைக் கொண்டு அயோத்திதாசர் கூறிய விளக்கங்கள் பிற சான்றுகளாலும் நிறுவப் பட்டுள்ளன. பறையர்கள் குருமார்களாக இருக்கும் சிறுதெய்வக் கோயில்கள் பலவற்றை இன்றும் காண முடியும்.

சீனக் கவிதை
ஒவ்வொரு விதையிலும் வாழ்வின் ஈரம்

பயணி  |
சீனப் பழம்பெரும் இலக்கியமான ஷிழ் சிங்-இலிருந்து
சில கவிதைகளின் நேரடி மொழிபெயர்ப்பு

காலச்சுவடுக்குத் தடை: முதல்வருக்குக் கடிதம்
குரல்கொடுக்கும் ஜனநாயகவாதிகள் |
அரசின் பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளைப் பலமுறை தலையங்கம் எழுதி வரவேற்ற 'காலச்சுவடு' இதழை, மாற்றுக் கருத்துகளை வெளியிட்டதற்காக இவ்வாறு தடைசெய்வது சகிப்பின்மையின் வெளிப்பாடு. இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் எதிரானது. பல்வேறு கருத்துகளை அறிந்துகொள்ள நூலக வாசகர்களுக்கு இருக்கும் உரிமையை இம்முடிவு பாதிக்கிறது.

கட்டுரை:
செயல்வழிக் கற்றல் - தடுமாறும் செயலாக்கம்

வே. வசந்திதேவி  | செயல்வழிக் கற்றல் மாற்றுப் பள்ளிகளில் சிறிய அளவில், சிறு எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு, தீவிரக் கண்காணிப்புடன், அதன் தத்துவார்த்த அடிப் படைகளைப் புரிந்து உள்வாங்கிய, அர்ப்பணங்கொண்ட, பல கட்டப் பயிற்சிபெற்ற ஆசிரியராலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

நேர்காணல்
வாழ்விலிருந்து எனது இலக்கியம்
நேர்காணல்: பா. செயப்பிரகாசம்

சந்திப்பு: தேவிபாரதி - பெருமாள்முருகன் |
இந்தி ஆதிக்கம் வருவதன் மூலம் தமிழினம் அடிமையாக்கப்படும் அப்படிங்கிற புரிதல் இருந்தது. தமிழ் மொழியின் எல்லாப் பயன்பாடுகளும் குறுக்கப் பட்டுவிடும் என உறுதியாக நம்பினேன். வாழ்வின் மீதான பிடிப்புகளை உதறிவிட்டு ஒரு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபட்டேன். ஆனா அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட்ட பல மாணவர்கள் பிறகு அதன் வாயிலாகக் கிடைத்த புகழை சுயநலத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. - பா. செயப்பிரகாசம்

மதிப்புரை
முதுகுளத்தூர் பயங்கரம் - வரலாற்றின் குருதியிலிருந்து இன்னுமொரு துளி

பழ. அதியமான் |

கட்டுரை:
இசை நினைவுகள்

அசோகமித்திரன்  | இந்திய இசையில் பக்திதான் பிரதானம். இறையுணர்வுதான் சிகரங்களை எட்டவைத்தது. எனக்குத் தெரிந்து அரசியல் சார்புடைய இசை நிபுணர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களும் தியாகய்யர் கிருதி வாசிக்கும்போது அவர்கள் தோற்றமே மாறிவிடும்.

கட்டுரை:
கொல்லும் அதிகாரம்

ரவிக்குமார்  | மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்கிற நாம், இப்போதைக்கு மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், அத்தகைய உணர்வு கொண்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருகிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

அஞ்சலி: பேராசிரியர்
ச. அகத்தியலிங்கம் (19.08.1929 - 04.08.2008)

பா. மதிவாணன்  | வரலாற்றில் சொற்றொடர் அமைப்புக் குறித்த நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கண முறையியலைக்கொண்டு தமிழ்த் தொடர்களை முதன்முதலில் ஆராய்ந்தவர் பேராசிரியர் அகத்தியலிங்கம்.

சிறுகதை:
ஒரு சின்ன, நல்ல விஷயம்

ரேமண்ட் கார்வர்
தமிழில்: ஜி. குப்புசாமி
  | முதன்முறையாக அவர்கள் இருவரும் இந்த நெருக்கடியான நேரத்தில் ஒன்றாக இருப்பதை அவள் உணர்ந்தாள். அதுவரையில் அவளும் ஸ்கூட்டியும் மட்டுமே பாதிக்கப் பட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றிவந்தது. அவன் என்னதான் அங்கேயே இருந்து வந்தாலும் தேவைப்பட்டிருந்தாலும் அவர்கள் உலகத்தில் ஹோவர்டை அவள் அனுமதித் திருக்கவில்லை.

எதிர்வினை:
கேள்விக்குள்ளாகும் நேர்மை

க. திருநாவுக்கரசு  | இலக்கியத் துறையில் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கக்கூடிய பலர் சமூக, அரசியல் விவகாரங் களில் மிக மோசமான புரிதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்குகள் மிக அபூர்வம்.

எதிர்வினை:
விழிப்புணர்வின் அடையாளம் - மாறுபடும் பார்வை

மலர்மன்னன்  | விழிப்புணர்வின் அடையாளம் எதுவெனத் தனக்குத் தெரியவில்லை என்று இமையம் சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவர் எதை விழிப்புணர்வு என்று கருதுகிறார் என இப்போது எனக்குச் சந்தேகமாகிறது.

சு.ரா பக்கங்கள்:
காலத்தின் கானல் - 8

வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது. இதன் பொருள் ஒவ்வொரு நிமிஷமும் பதற்றமானது என்பதல்ல; விறைப்பானது என்பது அல்ல; நகைச்சுவை அற்றது என்பது அல்ல. ஒவ்வொரு நிமிஷமும் தளர்வானது; ஆனந்தமானது; அதேசமயம் தன்னையும் புறத்தையும் ஊடுருவும் 'கண்களும்' கொண்டது. அந்தக் கண்களுக்கு இமையில்லை. விழிப்பு மட்டுமே உண்டு

தலையங்கம்
கண்ணோட்டம்
கடிதங்கள்