மஹ்மூட் தர்வீஷ் ஒரு பாலஸ்தீனப் படைப்பிலக்கிய கர்த்தா.இவர்
பாலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்கு கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941
இல் பிறந்தார். அக்கிராமம் 1948இல் இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன்
லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971இல் இஸ்ரேலைவிட்டு வெளியேறி கெய்ரோவில்
வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்து வந்தார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராகப் பல ஆண்டுகள்
பணியாற்றியுள்ளார். ஜனரஞ்சக இசைக்கலைஞர்களுக்கு நிகரான பிரபலம் இவருக்கு
இருப்பதாகக் கூறப்படுகிறது.
1969இல் ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் அமைப்பு இவருக்குத் தாமரை விருது
வழங்கிக் கௌரவித்தது.
இவரது முதல் கவிதைத் தொகுதியான 'சிறகிழந்த பறவைகள்' 1960 இல் வெளிவந்தது.
அவரது நூல்கள்: ஒலிவம் இலைகள் (1964), பாலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் (1966),
இரவின் முடிவு (1967), கலிலீயில் பறவைகள் இறக்கின்றன (1970), நான் உன்னைக்
காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கவில்லை (1972), ஏழாவது தாக்குதல் (1975),
திருமணங்கள் (1977). |