|
கட்டுரை:
சென்னகரம்பட்டி : அதிகாரத்தின் ஓலம்
ஸ்டாலின் ராஜாங்கம் |
ஆதிக்கச் சாதி அமைப்புகள் முதல் வெகுஜன ஊடகங்கள்வரை எஸ். சி / எஸ். டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருத்தினை உற்பத்திசெய்து பரப்புகின்றன. உண்மையில் இங்கு எழ வேண்டிய கோரிக்கையே இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள் என்பதுதான். இச்சட்டம்தான் இம்மக்களுக்குக் கிடைத்த சக்தி வாய்ந்த ஆயுதம். அதைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வுதான் இம்மக்களுக்கு வேண்டியிருக்கிறது.
புனிதப்படுத்தப்படும் ஜனரஞ்சகப் புனைவுகள் :
சதானந்த் மேனன் தமிழாக்கம்: என்னெஸ் |
பெரும்பான்மையான க்ரைம் கதைகள் நடைமுறையிலிருக்கும் போலீஸ் செயல்பாடுகளை ஆதரிப்பவை; உயர் சாதி ஒழுக்க நெறிகளை ஆதரிப்பவை.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்
க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர் |
அறிஞர் அண்ணா காங்கிரசில் இருந்ததில்லை. அவர் தம்மை நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை இயக்க வீரராகவும் வெளிப்படுத்திக்கொண்டார். அவர்க்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. தம்மை நெசவாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையும் பெருமிதமும் அடைந்தார்.
வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
பெருமாள்முருகன் |
நாவலில் குறிப்பிட்ட வட்டாரமே ஒரு பாத்திரமாக அமைந்தால்தான் அது வட்டார நாவலாகும் என்பவர்களும் உண்டு. வட்டாரமே பாத்திரமாக அமைதல் என்பது நாவலில் நிலம் மையப்படுதல் ஆகும். ‘நாகம்மா’ளில் நிலத்தை மையமாகக் கொண்டுதான் நாவல் இயங்குகின்றது.
பசுமைப் புரட்சியின் கதை: நவீன வேளாண்மை ஊடுருவி வளர்ந்த கதை
சங்கீதா ஸ்ரீராம் |
19ஆம் நூற்றாண்டிலிருந்தே சல்பர், பைரேத்ரம் போன்ற அதிகப் பாதிப்பற்ற சில பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தன. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே வகையான, அதுவும் அந்நிய ரகப் பயிரை விளைவிக்கத் தொடங்கியதிலிருந்துதான், பூச்சி என்பது ஒரு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்தது.
அஞ்சலி: முதல் வட்டத்தின் கடைசி எழுத்தாளர்
அசோகமித்திரன் |
சமகால மாறுதல்களைக் கணக்கிலெடுத்து இலக்கியப் படைப்பாளிகளை அளவிடுவது அபாயகரமானது. ஒருவருடைய மகத்தான படைப்புகளைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டுவதாய் இருந்தாலும் அவரது முதல் மூன்று படைப்புகளில்தான் அவருடைய புகழ் இன்றும் இருக்கிறது.
பத்தி: இங்கிலாந்து : மறு பார்வை தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா |
கணேசானந்தன், சமரசன் நாவல்களில் சில பொது அம்சங்கள் இருக்கின்றன. ஆங்கிலக் காலனியம் இக்கதைகளுக்குப் பின்புலனாகயிருக்கிறது. சமரசனின் நாவலில் வரும் பாட்டி அஸ்தமித்துப்போன அந்த ஆங்கிலேயப் பொற்காலத்துக்காக ஏங்குகிறார். கணேசானந்தனின் கதைமாந்தர்கள் ஆங்கிலப் பண்பாட்டை மிக வாஞ்சையுடன் நுகர்கிறார்கள்.
தமிழர் தாவரவியல் வழக்காறுகள்: பருத்தி
ஆ. சிவசுப்பிரமணியன்
|
சிறுகதை: பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
சுந்தர ராமசாமி |
என்னைத் துரத்திப் பிடிக்கும் காலம் என்மீது மோதி என்னை வீழ்த்துவதற்கு இடம் தராது நான் பாய்ந்து பாய்ந்து செல்ல வேண்டும். இரவு அல்லது நடுநிசியில் உறக்கம் கண்ணைச் சுழற்ற, இதற்கு மேல் களைப்பைத் தாங்க இயலாது என்ற நிலையில் நான் என்னைக் காலத்திலிருந்து சுருட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
காத்திருத்தல்
கே. என். செந்தில் |
அந்த ஊரிலிருக்கும் ஆறேழு தெருக்களில் உள்ள எல்லா வீடுகளுக்குள்ளும் அவனது அம்மாவின் ஈரக் கால்கள் தயக்கமின்றிப் புகுந்து வெளிவரும். அவர்கள் தரும் சொற்பக் காசுகளின் கனவில் குதிகால்களின் வலியை மறக்க முயல்வாள்.
கவிதைகள்
செல்மா பிரியதர்ஸன்
எஸ். செந்தில்குமார்
இரா. சுந்தரேஸ்வரன்
மொழிபெயர்ப்புக் கவிதைகள் மஹ்மூட் தர்வீஷ் கவிதைகள்
தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்
நாடகம் பதிவு : கறுப்பு ஜூலை பற்றிய சேரனின் நாடகம் What If the Rain Fails
க. நவம் |
ஜூலை இனப்படுகொலையின்போது கொழும்பு நகர வீதிகளிலும் சிறைச்சாலைகளிலும் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களும் இம்சைகளும் காடையர்களின் வெறியாட்டங்களும் பார்வையாளர் களது மனத்திரையில் கொண்டுவரப்பட்டன.
பதிவுகள்:
ராஜமார்த்தாண்டன் 60 : சூடேறாத தீவிரம்
மனத்திரையில் ஒரு மாலை
ஒரு பைசாத் தமிழன் நூற்றாண்டு விழா
திறந்த வெளி நாட்டுடைமை ஆவாரா பெரியார்?
பா. செயப்பிரகாசம்
எதிர்வினை “அரசு நினைத்தால் காலச்சுவடையே நிறுத்த முடியும்”
இமையம் |
காலச்சுவடு எதைக் கருத்துரிமை, வாழ்வுரிமை என்று சொல்கிறது? ‘கருத்து அமைப்பு’ உலகிலேயே மிகப் பெரிய அமைப்பென்று தோன்றவில்லை. அந்த அமைப்பு தலையிட்டால் உலகிலுள்ள கருத்துரிமைக்கும் வாழ்வுரிமைக்கும் எதிரான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்புவது வேடிக்கையானது.
இன்மையின் விகாசமும் அடிபணிதலின் சீரழிவும்
கண்ணன் |
‘காலச்சுவடு’ நூலகத் துறையை நம்பிச் செயல்பட வில்லை. ‘காலச்சுவ’டின் வளர்ச்சி நூலகத் துறை சார்ந்து ஏற்படவில்லை. இந்தப் போராட்டம் தேவை சார்ந்தது அல்ல, உரிமை சார்ந்தது. நூலகத் துறை மூலமாகவும் வாசகர்களை எட்டும் உரிமை சார்ந்தது. தமிழக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், எங்கள் தமிழ்ப் பங்களிப்பின் அடிப்படையில் நாங்கள் கோரும் உரிமை இது.
விவாதம் தோழர் எஸ். என். நாகராஜனின் மார்க்சியம்
மதிப்புரை நீர் பிறக்குமுன் -தலித் மக்களின் தண்ணீருக்கான போராட்டம்
தலையங்கம்
கடிதங்கள்
|