|
காலச்சுவடு நூறாவது இதழ் வெளியீட்டை ஒட்டி ஒரு விவரணப்படப் போட்டியை
அறிவித்திருந்தது. மார்ச் 2008 இதழில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
விவரணப்படப் போட்டிக்கான டிவிடி நகல்களை 01.04.2008க்குள் அனுப்பிவைக்குமாறும் அதில்
கோரப்பட்டிருந்தது. எனினும் பங்கேற்க விரும்பியவர்கள் பலரும்
கேட்டுக்கொண்டதற்கிணங்க முன்குறிப்பிடப்பட்டுள்ள விவரணப்படப் போட்டியின் முடிவுத்
தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்குத் தம் விவரணப் படங்களை அனுப்ப விரும்புவோர்
01.09.2008க்குள் டிவிடி நகல்களை அனுப்பிவைக்குமாறு கோரப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் 2008 அக்டோபரில் நடைபெறும் சுந்தர ராமசாமி நினைவு தின
நிகழ்வில் திரையிடப்படும். பதிவு மற்றும் விவரணப்படம் அனுப்ப வேண்டிய முகவரி:
காலச்சுவடு
216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி
சென்னை 600 005 தொலைபேசி: 91-44-2848 1662; 4215 5972
தொலைநகல்: 91-44-2848 1662 மின்னஞ்சல்:
kalachuvadu@gmail.com |