|
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களுக்குப்
பரிசுகள் வழங்கிவருகிறது. தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் நூல்கள், நாவல், சிறுகதைத்
தொகுப்பு, கவிதை நூல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கிய நூல் என ஆறுவிதத்
தலைப்புகளில் சுமார் 20,000 அளவுக்குப் பரிசுத்தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
2007ஆம் ஆண்டு வெளியான நூல்கள் வரவேற்கப்படுகின்றன. நூல்களை எழுத்தாளர் அல்லது அவரது
சம்மதத்துடன் வேறொருவர் அனுப்பலாம். ஒவ்வொரு நூலிலும் நான்கு பிரதிகள் அனுப்ப
வேண்டும். நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.06.2008.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
57/11, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி
மதுரை - 625 001.
செல்: 94436 95553. |