|
இணையத்தின் அடிப்படை அம்சங்கள் - வர்த்தகம், தொடர்பு, தகவல் விநியோகம்/பகிர்வு,
கேளிக்கை உட்பட - தொடர்ந்து, மிக
வேகமாகப் பரிணமித்துவருகின்றன. கடந்த 3 - 4 ஆண்டுகளில் இணையத்தில் ‘பிட்டு
பட’ங்களையும் அரட்டையையும் தாண்டிப் பல
அம்சங்கள் சேர்ந்து அதை மிகவும் சிக்கலான ஒரு ஊடகமாக்கியிருக்கின்றன.
TechCrunch, Wired போன்ற பிரபல வலையகங்கள் இணையத்தின் ஓயாமல் மாறிவரும்
போக்குகளைப் பற்றிப் பயனுள்ள
தகவல்களைத் தந்தபடி இருக்கின்றன. இணைய மாத இதழான ‘ஃபர்ஸ்ட் மண்டே’ (First Monday -
http://www.uic.edu/htbin/cgiwrap/bin/ojs/index.php/fm/index) தகவல் இரைச்சலைத்
தாண்டி இணையமும் பொதுவாகத் தகவல்
தொழில் நுட்பமும் இயங்கும் விதத்தை, அவற்றின் அரசியல், பொருளியல், உளவியல்
போன்றவற்றை விரிவாக அலசுகிறது.
இணையத் தொழில்நுட்பங்கள், பல்வேறு சமூகப் பிரிவுகளிடையே இணையப் பயன்பாடு, சோஷியல்
நெட்வொர்க்கிங் எனப்படும்
இணையப் பயனர் உறவாடல், இணையத் திருட்டு, இணையக் குற்றம், கலாச்சாரச் சிக்கல்கள்,
தொலைக் கல்வி போன்ற பல்வேறு
தலைப்புகளைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த வலையகத்தில் பார்க்கலாம்.

குறிப்பிடத்தக்க இந்தக் கட்டுரைகள், இந்தப் பத்திரிகையின் வீச்சைக்
காண்பிக்கின்றன: Online Social Networking as
Participatory Surveillance - Anders Albrechtslund, You have been poked:
Exploring the uses and gratifications of
Facebook among emerging adults - Brett A. Bumgarner, The aesthetics of networks:
A conceptual approach
toward visualizing the composition of the Internet - M.K. Sterpka, Who benefits
from the digital divide?- Brendan
Luyt, Digital Art/Public Art: Governance and Agency in the Networked Commons -
Christiane Paul.
1996இலிருந்து வெளிவரும் இந்த இதழ், இவரது சுமார் 1,000 கட்டுரைகளை (புத்தக
மதிப்புரைகள் உட்பட) வெளியிட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகச் சேகரித்த இந்தப் படைப்புகளை இணைய வரலாற்று ஆவணங்களாகவும்
கருதலாம்.
|