Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 101, மே 2008

     

கட்டுரை

போரும் தமிழ் சினிமாவும்
தியடோர் பாஸ்கரன் | திரைப்படத்தையும் நடிகர்களையும் தன் கொள்கைகளைப் பரப்பவும் மக்களின் ஆதரவைத் திரட்டவும் முதன்முதலில் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாட்டில் சினிமா-அரசியல் ஊடாட்டம் முப்பதுகளிலேயே தொடங்கிவிட்டது. இதன் தொடர்ச்சிதான் சுதந்திரத்திற்குப் பின் தமிழ்நாட்டில் நடந்ததும் இப்போது நடந்துகொண்டிருப்பதும்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்
அசோகமித்திரன் | அன்று கேவாகலர் கம்பெனி ஒரு மலிவு விலை ‘பெட்டி’ காமிரா விற்றது. ஐம்பது ரூபாய் காமிராவை நாற்பது ரூபாய்க்கு வாங்கிப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். நான் புகைப்படம் எடுப்பதைப் பொழுது போக்காகக் கருதவில்லை. கிடைத்த நூல்கள் எல்லாம் படித்துத் திறமை வாய்ந்த புகைப்படக்காரனாக இருக்கவே முயன்றேன்.

சங்க காலக் குடும்ப அமைப்பு?
பொ. வேல்சாமி | உலகியல் வெற்றிகளையெல்லாம் பெற்றுவிட்ட ஓர் ஆண்மகன் தன் வாழ்வின் இறுதியில் ‘முக்தி’ பேறு அடைந்து கடவுளோடு இணைவதாகக் காட்டப்படும்போதுகூடத் தலைவி என்று அவன் வாழ்நாள் முழுவதும், இணைந்து நடந்துவந்த பெண் என்பவள் வீடுபேறு அடையும் நிலையில் விலக்கப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா?
இமையம் | நம்முடைய சாதியையும் மதத்தையும் சிதையாமல் காப்பவை நம்முடைய சடங்குகள்தான். இந்திய - தமிழ் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட எல்லாப் படைப்புகளின் மொத்த நோக்கமும் சாதியையும் மதத்தையும் வளர்ப்பதுதான். சமூக ஒழுக்கத்தை, அறநெறிகளைப் பேசிய அதே அளவுக்கு மதம் பற்றியும் சாதி குறித்தும் பேசியுள்ளன.

பத்தி: இங்கிலாந்து: மறு பார்வை
ஐந்து வளையங்களும் இரட்டைப் பார்வைகளும்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா | மேற்கின் மனித உரிமை ஆதரவுகூட முரணானது. மனித உரிமைகளுக்கும் அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டால் மேல் நாட்டு அரசுகளைப் பொறுத்தமட்டில் தங்களின் அரசியல், வாணிக ஆதாயமே முக்கியம். சவூதி அரேபியா இதற்கு உத்தம உதாரணம்.

பிறவழிப் பயணம்: புழக்கடை மனிதர்கள்
ரவிக்குமார் | கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள் நகரங்களுக்குப் பெருமளவில் குடிபெயர்கின்றனர். அவர்களுள் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாத கிராமத்துப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக மாறுகின்றனர். ஏழைக் குடும்பங்களில் அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கப் பெண்கள் வீட்டு வேலைக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது.

சிறுகதை: கல்யாணி
ந. முத்துசாமி | அவன் அக்ரகாரத்தில் இருந்த பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக்கொண்டு வந்து கொடுத்தான். அதை வைத்து அவனைக் கேவலமாகப் பேசினார்கள் வடுவத் தெருவில். அதனால் அவனை நாடான் என்றார்கள். அவனுடைய அண்ணன் கௌரவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருடைய ஜாதி மறைந்து இருந்தபோது சர்க்கரையுடைய ஜாதி பெரிதாகத் தெரிந்தது.

கட்டுரைத்தொடர்

பசுமைப் புரட்சியின் கதை
இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு

சங்கீதா ஸ்ரீராம் | இயற்கை வேளாண்மையின் உயிரினப்பன்மைக் கோட்பாட்டிலிருந்து விலகி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே பணப்பயிரை விளைவிக்கும் புதிய வழக்கம் முளைத்தது. இதனால் பயறு வகைகளைப் பயிரிடும் வழக்கத்திலிருந்து இந்திய விவசாயிகள் விலகத்தொடங்கினர்.

கவிதைகள்
குவளைக் கண்ணன்
பவுத்த அய்யனார்
கே. சி. செந்தில்குமார்
எஸ். செந்தில்குமார்
இசை

உமாமகேஸ்வரி

அஞ்சலி
தேவசகாயம் லூர்து
இராம. திரு. சம்பந்தம்
கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்
க்ளார்க்

மதிப்புரை

பிள்ளை விளையாட்டு
ஹாலா



விடியலை நோக்கி
ஓவியா

   
தலையங்கம் | கடிதங்கள் | எதிர்வினை | கவிஞரின் வார்த்தைகள் சத்தியமானவை
பதிவு: அற்றைத் திங்கள்  | பாரதி கருவூலம் | பதிவு: மீண்டும் காகங்கள்
வலைப்பக்கம்: தொழில்நுட்ப அரசியல் | பதிவு: ஏப்ரல் தலித் வரலாற்று மாதம்