|
விமரிசகர்களும் வாசகர்களும்தான் இலக்கியத்தில் நல்ல அம்சங்கள் பற்றிய வரையில்
முக்கியமானவர்கள்.
இலக்கியத்தரம் உயர . . . என்கிற பிரச்னைக்கு ஒரு பதில்தான் உண்டு - அது
விமர்சகர்கள், வாசகர்கள் என்கிற சூத்திரத்திலேதான் அடங்கி இருக்கிறது.
தரம் அறிந்து விமரிசனம் செய்பவர்கள் சிலரும், தரம் அறிந்து படிக்கத் தெரிந்தவர்கள்
ஒரு இரண்டாயிரம் பேரும் எந்த இலக்கியத்திலும் தரம் உயர அவசியமாகிறார்கள்.
பிரபலஸ்தர்களின் பாராட்டுகள் தேவையில்லை; சாஹித்திய அக்காதெமிக்காரர்களின்
பரிசுகளோ, பதவிச் சிபாரிசுகளோ தேவையில்லை. அகில இந்திய ரோடியோ (ரோடியோ என்பது ஒரு
சர்க்கஸ் விளையாட்டு)வின் சாஹித்திய சமாராதனைகளோ, தயாரித்தளிக்கும்
அதிமேதாவியார்களோ தேவையில்லை. இலக்கியத்தரம் உயர விமரிசகர்களும் வாசகர்களும்
போதும்.
இருவரும் தரம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் - இலக்கியத்தில் ஒரு பயிற்சியை,
தேர்ச்சியை, ஒரு முயற்சியை மேற்கொள்ள ஆவலும் ஆர்வமும் காலமும் உள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழிலே தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம்
உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலக்கிய வட்டம் முதல் தலையங்கத்திலிருந்து
28.11.63 |