|
கட்டுரை
இரண்டாம் வருகை
கண்ணன் |
சுந்தர ராமசாமி படைப்புகளை மிகுந்த தயக்கத்துடனேயே
காலச்சுவடுக்குக் கொடுத்துவந்தார். ஒவ்வொரு படைப்புடனும் அப்போதைய நிர்வாக ஆசிரியருக்குக் கடிதத்தை இணைத்து அனுப்புவார். மிகச் சிறந்ததாக இருந்தால்
மட்டும் தன்னுடைய படைப்பைப் பிரசுரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நிராகரிக்கத் தயங்க வேண்டாம் என்றும் எழுதுவார்.
அவர் அனுப்பிய எட்டுச் சிறுகதைகள் காலச்சுவடில் பிரசுரிக்கப்படவில்லை என்பது என் நினைவு.
"மலேசியாவில் மக்கள் சக்தி": தைப்பூச விடுமுறையும் தமிழ்ப் படப் பிச்சையும்
கனகலதா |
ஆளுங்கூட்டணியின் இனவாதப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்றவற்றுக்கு எதிர்ப்பு வலுத்திருப்பதை ஆட்சியில்
இருந்தவர்கள் கவனிக்கத் தவறிவிட்டாலும் எதிர்க்கட்சிகள் சரியாகக் கணித்து அதற்கேற்பக் காய் நகர்த்தி, வெற்றி கண்டுள்ளன.
சிற்றிதழ் இயக்கம்
கவிதையில் எஞ்சும் காலத்தின் சுவடுகள்
க. மோகனரங்கன் |
எந்தவொரு அபூர்வமான நிகழ்வும் அது நிகழும் சமகாலத்தில் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. நுண்ணுணர்வு கொண்ட சிலரின் தொடர்ச்சியான மதிப்பீடுகளால் அது வரலாற்றின் ஒரு
பகுதியாக மாறிய பிறகே, அவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டுப் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்படுகிறது.
கனவுகளும் யதார்த்தமும்: ‘எழுத்து’ முதல் ‘கொல்லிப்பாவை’ வரை
ராஜமார்த்தாண்டன் |
மணிக்கொடிக் காலத்திலேயே கவிதையில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபோதிலும், புதுக்கவிதை ஒரு இயக்கமாக மறுமலர்ச்சியடைந்தது எழுத்துக் காலகட்டத்தில்தான்.
தூக்க நினைத்த கோவர்த்தன கிரி
பழ. அதியமான் |
மற்ற தொகுப்புகளின் படைப்புத் தேர்வு எப்படி நடந்திருக்கும்? பிரதி நிதித்துவப் படைப்புகளின் தொகுப்பா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா? மாதிரிகளா? படைப்புக்கு முக்கியத்துவமா? படைப்பாளர்க்கா? காலத்தின் வரிசையா? கருத்துக்கு முதன்மையா? ஏதேனும் வேறு நோக்கமா? இப்படித்தான் நடந்து முடிந்தது என்பதன் சாட்சியமா? காலம் புடைத்தபின் முறத்தில் தங்கிய நெல்லின் மணியா? விருப்பங்களின் தேர்வா? கிடைத்தவற்றின் திரட்டா? கிளிமூக்கின் தேர்ந்தெடுப்பா?
நிகழ் என் அனுபவம்
ஞானி |
சிற்றிதழ் இயக்கம் என்பது அடிப்படையில் வணிகக் கலாச்சாரத்திற்கு எதிராக, மக்கள் மத்தியில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை வளர்த் தெடுக்கிற இயக்கமாகத்தான் இருக்க முடியும். இந்த இயக்கம் இலக்கியத்தோடு மட்டும் உறவு கொண்டதாக இல்லாமல் நவீன ஓவியம், நவீன நாடகம், புதிய வகைத் திறனாய்வு முறை முதலியவை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
|
தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள்
அம்ஷன் குமார் |
'தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு ரென்வார், ஒரு கோடார்டு, ஒரு பிரஸோன் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் விதிக்கவில்லை. மேலைநாட்டுச் செடிகளைப் பிடுங்கிக்கொண்டுவந்து இங்கே நட்டு வளர்த்து இவர்கள் நஷ்டம் அடைய வேண்டாம்.'
கட்டுரைத்தொடர்: பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்
சங்கீதா ஸ்ரீராம் |
யாருமே விதைகள் விதைக்காமல், எரு சேர்க்காமல், பூச்சிக்கொல்லி விஷங்கள் தெளிக்காமல், நீர் பாய்ச்சாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து, மண் வளத்தைக் குறைக்காமல் தழைத்து நிற்கின்றன காடுகள். நம் முன்னோர்கள் இந்தக் காடுகளிடம் பாடம் பயின்றவர்கள்.
பத்தி: பிறவழிப் பயணம் காணாமல்போன நரிக்கொம்பு
ரவிக்குமார் |
நமது ஜனநாயகம் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படும் ஜனநாயகம். ஆள் பலம் கொண்ட சமூகங்களுக்கே இங்கு மவுசு அதிகம். எனவே குறைந்த எண்ணிக்கையுடைய சமூகங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் இருப்பதில்லை.
சிறுகதை: அறை
லதா |
அத்தனை பேர் பார்வையும் என்னையே துளைக்கிறது. கண்களை உயர்த்தி நேராகப் பார்க்க முடியவில்லை. திடீரென்று ஒரு கூச்சம், அருவருப்பு. உடல் முழுதும் ஊர்கிறது.
சுரா பக்கங்கள் புலமையின் அம்மணம்
சுந்தர ராமசாமி |
சுந்தர ராமசாமி தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த சிறுகதையின் 'கரட்டு வடிவம்' இது. செம்மைப்படுத்தாத நிலையில் நோட்டுப் புத்தகத்தில் இருந்தவாறு இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கவிதைகள்
ஞானக்கூத்தன் தேவதேவன் கவிதைகள் சேரன் கவிதை எம். யுவன் சுகுமாரன் சுதீர் செந்தில் அனார் மாதுமை எஸ். தேன்மொழி கவிதா
அஞ்சலி சுஜாதா: நட்சத்திர எழுத்தாளர்
குவளைக் கண்ணன் |
சுஜாதா நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தவர், தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர், அநேகமாக உலகின் சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கக்கூடியவர். சுஜாதாவின் எழுத்துகளைவிட சுஜாதா சுவாரஸ்யமானவர். தனது எழுத்தைப் போலன்றி அவர் தீவிரமானவர்.
|