தலையங்கம்
 

  தமிழ்நாட்டின் அரசியல்களம்தான் பழகிவந்த பாதையிலிருந்தும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. கட்சிகள் பழையனவாக இருந்தாலும் தலைமைகள் புதியனவாக இருப்பதும் கவனத்திற்குரியது. ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடம், மாநில அரசை இயக்கவிடாமலும் இயங்கவிடாமலும் தடுத்துக் கொண்டிருக்கிறது. மாநிலம் கடும் வறட்சியையும் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் மாநில அரசின் செயல்பாடு கவலையை ஊட்டுகின்றது. தமிழக விவசாயிகள் புதுடெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆளும் அணி, மாநில அரசு நிர்வாகத்தை நடத்துவதைக் காட்டிலும் தன் கட்சி அணிஅணியாகப் பிரிந்துகிடப்பதிலுள்ள சிக்கலில்தான் சோம்பிக்கிடக்கிறது. அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளரான தினகரன், அதிகார மையத்தை நோ

கடிதங்கள்
 

ஏப்ரல் இதழில் ‘கேள்விகளின் நெடுவாசல்’ தலையங்கம், நெடுவாசல் குறித்த கட்டுரை, ‘தற்காலிக விடை’, ‘பேச மறந்த சூரியன்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. தலையங்கத்தின் இறுதியில் குறிப்பிட்டதுபோல் நமக்கான அரசுகள் எங்கேயும் இல்லை; அதுதான் உண்மை. அதற்கான சூழலை நோக்கிய பாதை ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டதுதான். இப்போதுதான் தெளிவாக நம் மக்களுக்குத் தெரிகிறது. அவ்வளவு எளிதில் அடைய முடியாத பாதையை ஓரிரண்டு போராட்டங்களில் மட்டும் அடைய முடியாது. நெடிய போராட்டங்களுக்குத் தங்களைத் தொடர்ந்து உட்படுத்துவார்களா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து, கட்சிகளை உடைக்கும் உள்ளடி வேலைகளில் பாஜக தேர்ந்திருக்கிறது என்பதை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை அக்கட்சி கையாண்ட விதத்திலேயே தெரிந்துகொ

அஞ்சலி: மா. அரங்கநாதன் (1932 - 2017)
சமயவேல்  

1990இல் சென்னை மீனம்பாக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் பத்து மாதப் பயிற்சி. ஒரு சிறிய இதயத்தாக்கிலிருந்து மீண்டிருந்த காலம் என்பதாலும் பயிற்சிக்குப் பிறகு எந்த ஊருக்கு அனுப்புவார்கள் எனத் தெரியாததாலும் பழவந்தாங்கலில் ஓராண்டு குடும்பத்துடன் இருக்கலாம் என முடிவுசெய்து, ஒரே நாளில் வீடும் குழந்தைகளுக்குப் பள்ளியில் இடமும் பிடித்து, அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் சென்னைவாசி ஆனோம். அந்த வாரமே வண்ணநிலவன் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இரண்டு ஆச்சர்யங்களைத் தெரிவித்தார். ஒன்று: எங்கள் நண்பர் சுப்பிரமணிய ராஜுவின் வீடு இருந்த அதே பாரதியார் தெருவில்தான் நாங்கள் குடியேறியிருக்கிறோம். இரண்டு:  மா. அரங்கநாதன் வீடு மிக அருகில் இருக்கிறது. வண்ணநிலவன் கூறியிருந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு

அஞ்சலி: கிஷோரி அமோங்கர் (1931 - 2017)
யுவன் சந்திரசேகர்  

  கிஷோரி-தாய் என்று பிரியமாக அழைக்கப் பட்ட கிஷோரி அமோங்கர் தமது எண்பத்து நாலாம் வயதில் மறைந்துவிட்டார். இசையைப் பிழைப்புக்கான வழியாகக் கருதாத தலைமுறையின் கடைசி இலைகளில் இன்னொன்று உதிர்ந்துவிட்டது - சம்பிரதாயமான வார்த்தைகளில் சொன்னால், ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு! ஆனாலும், இரண்டு ஆறுதல்கள் உண்டு. ஒன்று, பெருவாழ்வு வாழ்ந்து, கிளையிலேயே பழுத்து வதங்கி உலர்ந்து உதிர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூப்பின் காரணமாக செயலூக்கம் வெகுவாகக் குறைந்துவிட்ட பின்னணியில், அமர்ந்திருக்கும் சீடர்களைத் தன்னைவிட அதிக நேரம் பாட அனுமதிக்கும் நிகழ்த்துக் கலைஞரை நூறாண்டு வாழச் சொல்லி வற்புறுத்துவது நியாயமில்லை. அவருடைய ஆயுள் நீடிப்பதே நமக்கு விருப்பமானது என்றாலும், தளர்ச

மதிப்புரை
சாளை பஷீர்  

நிலைத்த பொருளாதாரம் (கட்டுரைகள்) ஜே.சி. குமரப்பா தமிழில்: அ.கி. வேங்கடசுப்ரமணியன் வெளியீடு:  இயல்வாகை பதிப்பகம் குக்கூ குழந்தைகள் நூலகம், கயித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி & 638 751, திருப்பூர் மாவட்டம். பக்கம்: 160   விலை: ரூ.200 சவூதி அரேபியாவின் பாலைவனங்களில் வசித்துவரும் பழங்குடியினரை நாகரிகப்படுத்தும் முகமாக  நவீன வசதிகள் உடைய ஒரே மாதிரி அடுக்ககங்களை நகரங்களில் கட்டியது அந்நாட்டரசு. அதில் வலுக்கட்டாயமாக அவர்களைக் குடியேற்றியது. ஆனால், இரண்டொரு நாட்களிலேயே “எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று குச்சியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் பாலைவன வாழ்க்கைக்கு மீண்டார்கள். நாம் வேண்டுமென்றால் இதைப் புரிந்துகொள்ளச் சுணங்கலாம். ஆனால், இயற்கைக்குள் வாழும் தொல்குடி

மதிப்புரை
க. சேகர்  

சூறாவளி (இரு குறுநாவல்கள்) லெ. கிளெஸியோ தமிழில்: க.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் -1 பக்கம்: 192   விலை: ரூ.175 ‘சூறாவளி’, ‘அடையாளத்தைத் தேடி அலையும் பெண்’ என்ற இரு குறுநாவல்களின் மொழிபெயர்ப்பாக இத்தொகுதி அமைந்துள்ளது. முதல் குறுநாவல், ‘பிலிப்கியோ’ என்ற பயணர் ஒருவரின் வாழ்வின் பின்நோக்காகவும் அதே நிலையில் சமகால வாழ்வின் ஓட்டமாகவும் பின்னிப் பிணைந்ததாகும். பிலிப்கியோ - இந்த நாவலாசிரியரின் பிரதி என்பதை உணர முடிகிறது. யூதோ தீவை விட்டுச்சென்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரும்பிவரும் பிலிப்கியோ தன் முன்னைக் காதலி மேரியின் நினைவுகளோடு அலைகிறான். மேரி ஒரு சுற்றுலாவிடுதிப் பாடகி. பிலி

கவிதைகள்
சஹான,ஓவியம்: டெரக் வால்காட்  

  என் அறையே பெரு நிலம் குளியல் அறையே குளிர்ந்த காடு இப்பொழுது என் காட்டருவியில் நீராடுகிறேன் அறையில் காணும் மரங்களிலெல்லாம் எனது பெயரையே செதுக்கியிருக்கிறேன் இது என் அறை என் நிலம் என் வனம் என் வானம். காற்று மெதுவாய் தேன் கூட்டுக்குள் நுழைய எழும்பிப் பொங்குகிறது தேன் வழியும் தேனில் ஒரு துளி என் நாவில். மர உச்சியில் அடைகாக்கப்படும் முட்டைபோல் இரவில் கட்டிய தேன்கூடுபோல் ஆற்றிலிருந்து கடல் நோக்கிப் பயணிக்கும் மீனைப்போல் மழைச்சாரலில் வெளியேறும் பட்டாம்பூச்சிபோல் பைக்கில் நான் அப்பாவோடு.

கவிதைகள்
றஷ்மி,ஓவியங்கள்- றஷ்மி  

கவிதை1: காலங்கள் மூன்று நிகழுங் காலம் வாசனைகளால் ஞாபகங்கொள்ளப்படுகின்றவள் சூழவும் முழுக்கக் கமழத்தொடங்கிய நாளிலொன்றில் நகர் நீங்கிய தூரம் நெடும் காலத்திலும் காதத்திலும் இரண்டாங்காலம் நகரில் ஒருக்காலம் அவள் அரசி  அவள் மட்டும் ராவும்பகலும் உடைமாறி யணிந்து திரிகின்றோம் சிலபோது ஒன்றை இருவரும்  பலப்போது அதுவுமற்று. சின்னஞ்சிறு உலக மது. சிறு உலகம் சற்றேறக்குறைய வருடங்கள் ஐந்து ஆயுளில்  அழிந்துபோன வேற்றுக் கிரஹம் காதலும் கலவியும் மாத்திரம் பயிற்றும் பயிலும் கூடம். ஆயுள் அற்பத்துள் அனைத்தையும் வாழ்ந்து தீர்க்கிறோம் நொடி நீளம் சூரிய வருடங்கள் ஐந்து பகலைத் திரையிட்டு இருளவைத்திருந்த இளநீல உலகம். யன்னலில் கசிகிற ஒளியின் விகிதம் ஏற்றங்களில் ஐதும் இறங்கி செறிந்துமாய் உடலங்களில் வழ

கவிதைகள்
அரபி: நிசார் கப்பானி,தமிழில்: அ. ஜாகீர் ஹுசைன் பாகவி  

நான் கவலையில் விழுவதற்கு உனது காதல் எனக்குக் கற்றுத்தந்தது நீண்ட நாட்களாகவே ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்கின்றேன் அவள் என்னைக் கவலையில் தள்ளவேண்டும் அவளது தோள்களில் சாய்ந்து அழவேண்டும் சிட்டுக்குருவியைப்போல அவள் என்னைப் பொறுக்கியெடுக்கவேண்டும் உடைந்து தெறித்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்குவதைப்போல உனது காதல் தீய பழக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தது இரவில் ஆயிரம் தடவை மதுக்கோப்பையைத் திறக்கின்றேன் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன் குறிசொல்லும் பெண்களின் கதவைத் தட்டுகின்றேன் வீட்டிலிருந்து வெளியேறி நடைபாதையில் சுற்றித்திரிகின்றேன் வாகனங்கள் உமிழும் ஒளிகளிலும் மழைத்துளிகளிலும் உனது முகத்தை நோக்கி வருகின்றேன் அடையாளம் தெரியாத ஆடைகளுக்கு மத்தியில் உனது ஆடையைப் பின்தொடர்கின்றேன் விளம்பரப் பக்க

கட்டுரை
பெருமாள் முருகன்  

  அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிபவன் நான். என் மாணவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வருபவர்கள். சிறுவயது முதலே உடல் உழைப்பில் ஈடுபட்டுக்கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். உயர்கல்விக்கு வந்த பிறகும் பகுதி நேரமாக உடல் உழைப்பு வேலைகளைச் செய்துகொண்டே படிக்கிறவர்கள். தமக்குரிய செலவைத் தாமே பார்த்துக்கொள்வது மட்டுமல்ல, பலர் தம் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியைக் குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள். பகலில் ஒருவேளை மட்டுமே உண்பவர்கள். ஆரோக்கிய உணவு என்பது அவர்களுக்குக் கனவே. வருகைப் பதிவு, புத்தகம் வாங்குதல் உள்ளிட்ட நடைமுறையில் கடுமை காட்டினால் பலர் இடைநின்றுவிடுவார்கள். உழைத்துக்கொண்டே படிப்பதற்கேற்ற வகைப் படிப்புகளாக இலக்கியம், வரலாறு, ப

கட்டுரை
இரா. திருநாவுக்கரசு  

  ”என் வாழ்க்கையில இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லங்க; குறைந்தது ரெண்டு லட்சம் பேராவது வந்திருப்பாங்க; எல்லோர் முகத்திலேயும் அப்படி ஒரு பரவசம், அவர் பாடும் ஒவ்வொரு பாட்டுக்குப் பிறகும் மக்களிடம் உருவான எழுச்சி அதுக்குப் பின்னாடி எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியிலேயும் பார்க்கவே இல்லை,” இப்படித்தான் 1990 இல் ஐதராபாத் நிஜாம் கல்லூரி மைதானத்தில் கத்தார் நடத்திய நிகழ்ச்சிபற்றி என் நண்பர் சொன்னார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குச் சற்று அதிகமான காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பிறகு, அன்றைய முதல்வர் சென்னா ரெட்டி அறிவித்த சலுகைகளை அடுத்து முதல்முறையாக மக்கள் முன் வந்து கத்தார் தனது நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சிபற்றி இன்றுவரை பிரமிப்போடு மட்டுமே பலரும் பேசி வருவதைக் கேட்கிற

கட்டுரை
அ. முத்துலிங்கம்  

இன்று முழுக்க அசோகமித்திரனை நினைக்கும் நாள். ரொறொன்ரோவில் 18 யூன் 2016இல் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழாவில் அசோகமித்திரனுக்கு, அவர் எழுதிய ‘குறுக்கு வெட்டுகள்’ நூலுக்கு 500 டொலர் பரிசு வழங்கப்பட்டது. அவரால் பரிசை ஏற்றுக்கொள்ள ரொறொன்ரோவுக்கு வரமுடியவில்லை. அந்தப் பரிசுப் பணத்தை அவருக்கு அனுப்பும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது; நானும் அனுப்பினேன்; அவரும் கிடைத்தது என்று கடிதம் எழுதினார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் கணக்காய்வு நிறுவனம் எனக்கு ஒரு கேள்வி அனுப்பியிருந்தது. ‘அசோகமித்திரனுக்கு அனுப்ப வேண்டிய 500 டொலர் பணத்தை நீங்கள் ஜெ. தியாகராசன் என்பவருக்கு அனுப்பியிருக்கிறீர்கள். காரணம் சொல்ல முடியுமா?’ வெள்ளைக்காரக

கட்டுரை
பழ. அதியமான்  

  வெகுஜன இதழ்களில் அசோகமித்திரன் எழுத்து களைப் பார்க்க நேரும்போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். விழலுக்கு நீர் பாய்ச்சி ஏன் மாய்கிறார் இவர் என்று  தோன்றும். இதற்கான பயன் பணஅளவிலும் சரி மதிப்பீடுகள் நிலையிலும் சரி, நியாயமான அளவு இருக்காதே என்று நினைப்பதுண்டு. ஆனால் அதன் பயன் Zero சதவீதம்தான்என்றும் சொல்லிவிட முடியாது. இலக்கியம் மீறிய வேறு காரணங்கள் இருக்கக்கூடுமோ, என்னமோ? 1980களில் குங்குமத்தில் வெளிவந்த கதை ஒன்றின் மூலம்தான் அசோகமித்திரன் எழுத்து எனக்கு அறிமுகமானது. குப்பைகளுக்கு இடையில் மாணிக்கம் பளிச்செனத் தெரிவது ஆச்சர்யமல்ல. ஏதோ சிறைச்சாலை சம்பவம் அதில் வரும். இதைத்தவிர கதையின் பெயரோ வேறு எதுவுமோ எனக்கு நினைவில் இல்லை. கூரான அனுபவம். எளிமையான சொற்கள், வார்த்த

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தரஜா  

  இறந்தவர் பற்றிய கட்டுரையில் அதை எழுதுகிறவர் பற்றியே அதிகம் வரும் என்ற குற்ற உணர்வுடன் அசோகமித்திரன் பற்றி எழுதுகிறேன். இதைத் தவிர்க்க இக் கட்டுரையில் அவருடைய எழுத்துக்கள் பற்றியும் வரும்; அவருக்கும் எனக்குமான தொடர்பு பற்றியும் வரும். ஒரு நாலு பத்தாண்டுகளுக்கு முன் பொங்கல் வாரத்தில் சென்னையில் நடந்த இலக்கியக் கருத்தரங்கில் அசோகமித்திரனை முதல்முதலாகச் சந்தித்தேன். அந்த நாட்களில் எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்வது இலேசான காரியமில்லை. ஆசிரியரின் படங்களுடன் கட்டுரைகள், கதைகள் அச்சிடும் பழக்கம் அப்போது இல்லை. இன்றுபோல் சமூக வலைத்தளங்கள் இல்லை. இவர்தான் என்று அறிந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் ஒரு கதை கேட்டிருந்தேன். அந்த நாட்களில் ஒரு பத்திரிகைக்கு

கட்டுரை
விமலாதித்த மாமல்லன்  

  பெஸண்ட்நகர் ஸ்பேசஸில் நடந்த கூட்டத் துக்கு, அசோகமித்திரனை பைக்கில் அழைத்துச் செல்ல அவர் இருந்த வேளச்சேரி வீட்டிற்குச் சென்றிருக்கிறார் கடற்கரய். அப்போதே அவருக்கு வயது 70ஐயும் தாண்டியிருந்தது. அந்த பைக்கில் அவர் பின்னால் ஏறி உட்காருவதற்குள்ளாக, அவருக்கு நன்றாக வண்டி ஓட்டத் தெரியுமா என்பதில் தொடங்கி ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார் அசோகமித்திரன். அவரைக் கூட்டிவந்து பெஸண்ட்நகரில் சேர்ப்பதற்குள்ளாக, அவர்களுக்குள் நடந்த உரையாடலை பாம்பன்விளையில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், அசோகமித்திரனைப் போலவே நடித்துக் காட்டியிருக்கிறார் கடற்கரய். அந்த மிமிக்ரியின் தொடக்கத்தில் இருந்து குழுமியிருந்த அனைவரும் விழுந்து புரண்டு சிரிக்காத குறையாக ரசித்திருக்கிறார்கள். வண்டி, தரமணியைத் தாண்டும்போது

கட்டுரை
லேகா ராமசுப்பிரமணியன்  

  சாமான்ய வாழ்வின் நிகழ்வுகளால் ஆனது அசோகமித்திரனின் எழுத்துலகம். அன்றாட வாழ்வின் துயரங்களை நுட்பமாகவும் விரிவாகவும் வெளிப்படுத்துவதில் இவரது படைப்புகள் முதன்மையானதாக இருக்கின்றன. நெருக்கடி மிகுந்த தினப் பொழுதுகளையும் அதைக் கொண்டு செலுத்த மனிதர்கள் படும்பாடுகளையும் மிகையுணர்ச்சியில்லா மொழியில் புனைவாக்கியவர். தேவைக்கு அதிகமான சொல்லாடலோ, கதைக்கு உதவாத விவரணைகளோ இல்லாதவை இவரது படைப்புகள். வாழ்க்கையில் தற்காலிக சந்தோஷங்கள்கூடக் கைகூடாதவர்களை மையப்படுத்திய இவ்விரு சிறுகதைகளும் அலைக்கழிக்கப்படும் வாழ்வின் சாட்சியாய் இருப்பவை.பெருநகரச் சுழற்சியில் மீட்க வழியின்றிக் கைவிடப்பட்ட இம்மனிதர்களின் கதைகள் முகத்திலறையும் அழுத்தம் கொண்டவை. ‘ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்’ (1959): சையது அப்துல

கட்டுரை
சேரன்  

  தமிழின் முதன்மையான எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் என்பது வெறுந் தகவல் அல்ல. அது வாழ்விலே ஒரு முறைதான் நிகழக் கூடியது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு நிகழ்வு ஒன்றில் அவரைக் கடைசியாகச் சந்தித்துப் பேசியபோது, 1983இல் நான் அவர் வீட்டுக்குச் சந்திக்கச் சென்றமை பற்றி நினைவு கூர்ந்தார். ‘பயங்கரமான காலம் வரப் போகிறது. எப்படித்தான் நீங்கள் எல்லாம் தப்பிப் பிழைக்கப்போகிறீர்களோ என்று யோசிக்கப் பயமாக இருக்கிறது. பேசாமல் இங்கேயே இருந்துவிடுங்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எல்லாம் கேட்கவா போகிறீர்கள்?” என்று அவர் அந்தச் சந்திப்பில் சொன்னதை மறக்க முடியாது. ஈழத்து இலக்கியர்கள், போராளிகள் என்று பலர்  அவரைச் சந்தித்திருந்தனர். எல்லோருக்கும் அவர் இப்படித்தான் சொல்லி

கட்டுரை
ஜனனி  

  தீபாவளி, பொங்கல், கார்த்திகை எனப் பண்டிகை களுக்குப் பணம் ஒதுக்கித் திட்டமிட்டுச் செலவழித்த நினைவு எனக்கு இல்லை. ஆனால், கண்காட்சி சமயத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பணத்தை அப்பா சேமித்துவைப்பார். எங்கள் குடும்பத்தில் அதுதான் மிகப்பெரிய திருவிழா. நடுத்தரக் குடும்பத்தில் இவ்வளவு புத்தகங்களா என்று இரவல் வாங்கித் திருப்பித் தராதவர்கள் முதல் புத்தகங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்பவர்கள்வரை எங்கள் வீட்டு நூலகத்தைப் பார்த்து மலைத்துப்போவார்கள். அந்த அளவிற்குப் புத்தகங்கள். அப்பாவிற்கு வாசிக்கப் பிடிக்கும். சிறுவயது முதலே பிரபல இதழ்களை வாசிக்கும் பழக்கம் அப்பாவிற்கு இருக்கிறது. ஆனால், தீவிர இலக்கிய வாசிப்புக்கு ஜே. தியாகராஜன் என்கிற அசோகமித்திரன்தான் முக்கிய காரணம். எங்கள் குடும்ப

கட்டுரை
ஏ.எஸ். பத்மாவதி  

  அசோகமித்திரனை எழுத்துக்கள் மூலம் கிட்டத்தட்ட 40 வருடங்களாகப் பழக்கம். குடும்ப நண்பராக 34 வருடங்களாகப் பழக்கம். எழுத்து வேறு எழுத்தாளர் வேறு என்று இரட்டை முகமூடியோடு இயங்காத வெகு அபூர்வமான எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அவர் எழுத்து நம்மைச் செதுக்குவது போல், பழக்கமும் செதுக்கும். இதுவரை இலக்கியம் பற்றித் தனி நபர் சம்பாஷணைகளைத் தாண்டிப் பேசாத நான், அசோகமித்திரன் எழுத்துபற்றி என்னை மதித்த எல்லா இடங்களிலும் பேசி இருக்கிறேன். அதற்குக் காரணங்களாக நான் பார்ப்பது அவர் எழுத்தின் மேல் எனக்கிருந்த தீராத நம்பிக்கையும் படிக்கப் படிக்க என்னை நானே செதுக்கிக்கொள்ள அது உதவியது என்பதைத்தான். குடும்ப நண்பராக, அவருடனான தருணங்களைப் பகிர்ந்துகொள்ள, மற்றவர்களுக்கிருப்பதைப்போல் எனக்கும்

கதை
அசோகமித்திரன,ஓவியங்கள் - மணிவண்ணன்  

  ஆங்கிலத்தில் இதை ‘பாப்புலர் மிஸ்கன் சப்ஷன்ஸ்’ வகையில் சேர்ப்பார்கள். எல்லா கன்னடிகர்களும் ஒன்று சேர்வார்கள், எல்லா மலையாளிகளும் ஒன்று சேர்வார்கள், ஆனால் தமிழர்கள் மட்டும் மூலைக்கு ஒருவராகப் போய் விடுவார்கள். நிஜாம் ரயில்வேயாக எங்கள் ஊரில் அதன் முக்கிய இரண்டாம் நிலைப் பணியாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளில் முக்கியமானவை இரண்டு. லான்சர் பாரக்ஸ், காவல்ரி பாரக்ஸ். இவை முதலாம் யுத்த காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கும். மொத்தம் மூன்று வரிசைகள். இருபத்திமூன்று வீடுகள். இருபத்திமூன்று குடும்பங்கள். அதில் மூன்று பால்காட் அல்லது பாலக்காட்டுக் குடும்பங்கள். அவர்கள் தமிழை விட மலையாளம் நன்கு அறிவார்கள். அவர்களை மலையாளிகள் என்று அழைப்பதில் தவறேதும் இருக்காது. ஆனால், பண்டி

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

  மூன்று விடயங்கள் மனிதருக்கு முக்கிய மானவையாக இருக்கின்றன: உணவு, உறவு, உணர்வு. தொடர்ந்து இரண்டு வேளை உணவில்லாமற் போனால் நாம் துவண்டுவிடுகிறோம். தொடர்ந்து இயங்கமுடியாமல் தவித்துப்போகிறோம். தொடர்ச்சியாகச் சில நாட்கள் உணவும் ஊட்டச் சத்தும் கிடைக்காமற் போனால் உயிர் வாழவே முடியாது. “வயிறு, மனிதரை இட்டுச் செல்கிறது” எனும் ஆங்கிலப் பழமொழி உண்மைதான் என்றாலும், வயிறு நிறைந்ததும் நாம் நம் அருகே வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேட முற்படுகிறோம். காரணம், அடிப்படையில் நாமெல்லாம் சமூக மிருகங்கள். ஆங்கிலக் கவிஞர் ஜான் டன் சொன்னதுபோல, “எந்த மனிதரும் ஒரு தீவு அல்ல.” குடும்பம், சமூகம், உலகம் போன்ற உறவுகளின்றி மனிதன் ஓர் இயல்பான, நிறைவான வாழ்க்கை வாழ முடியாது. முன்னவை போலவே

கட்டுரை
செ. சண்முகசுந்தரம்  

  கோவையில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக்கழகத் தோழர் முகம்மது ஃபாரூக்கின் படுகொலை தமிழகத்தில் முற்போக்கு சக்திகளிடையே மிகப்பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்திருக்கிற‌து. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இப்படுகொலை நடத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு புறம் பெரியாரிய இயக்கத் தொண்டர்களுக்கும் மறுபுறம் இஸ்லாமிய இளைஞர்களுக்கும் மிகப்பெரும் கருத்து மோதல் சமூக வலைத் தளங்களில் நடக்கிறது. இப்படுகொலையை முற்போக்கு இஸ்லாமிய சக்திகள் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கின்றன. கொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் எனவும் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல‌ எனவும் சொல்லியிருக்கிறார்கள். முற்போக்கு இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் படுகொலைக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இக்கொலையைச் ச

கட்டுரை
ச. பால்ராஜ்  

  'தேசசத் துரோகிகளின் கூடாரம்’ என்று இந்துத்துவ மதவாதிகளால் விமர்சிக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துச் சுதந்திரம், கலாச்சாரச் சுதந்திரம் போன்ற தனிமனிதச் சுதந்திரக் கட்டமைப்பைக் கொண்டு இயங்குகிறது அப்பல்கலைக்கழக வளாகம். இங்கு உருவாகும் புரட்சிகரச் சிந்தனைகளையும் எழுச்சிமிகு போராட்டங்களையும் அறிவுசார் வாதங்களையும் கருத்தியல்சார் அரசியலையும் முன்னெடுத்துச் செல்லும் மாணவர்களின் செயல்பாடுகள் மக்களவை, மாநிலங்களவைகளிலும் விவாதப் பொருளாக இருந்துவருகின்றன; இதன்மூலம் நாடு தாண்டிய கவனத்தையும் ஜேஎன்யு பெற்றுள்ளது. 2016 பிப்ரவரி 9 அப்சல் குருவின் நினைவு தின அனுசரிப்பில் மாணவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் பாக

கட்டுரை
சுகுமாரன்  

புகழ்பெற்ற கவிஞர்களில் இருவர் அடுத்தடுத்து மறைந்திருக்கிறார்கள். கரீபியக் கவிஞர் டெரக் வால்காட் 2017, மார்ச் 17 அன்றும் ரஷ்யக் கவிஞர் யெவ்கெனி யெவ்டுஷெங்கோ ஏப்ரல் 1 அன்றும் காலமானார்கள். சமகால உலகக் கவிதைகளின் தொகுப்புகள் அனைத்திலும் நிச்சயமாக இருவரும் இடம்பெற்றிருப்பவர்கள் என்பதைத் தவிர இருவருக்கும் இடையில் ஒற்றுமைகள் இல்லை. எனினும் இருவரையும் வாசிப்பின் வாயிலாக அறிந்து வைத்திருக்கும் வாசக மனம் சில ஒப்பீடுகளை நிரல்படுத்திப் பார்க்கவே விரும்புகிறது. இருவரும் ஏறத்தாழ சம வயதினர். அவரவர் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்களில் வாழ்ந்தவர்கள். மேற்கு இந்தியத் தீவுகளில் காலனி ஆட்சி நடைபெற்ற காலத்திலும் அதற்கு எதிரான போராட்ட நாட்களிலும் வாழ்ந்தவர் வால்காட். கம்யூனிச ஆட்சிக்கு உட்பட்டிர

அறியப்படாத பாரதி-9
ய. மணிகண்டன்  

  தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு          செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால், ஆவ லறிந்துவரு வீர்கொலோ? - உம்மை          யன்றி யொருபுகலு மில்லையே எனத் தொடங்கி,  ‘வலிமை, வலிமை’யென்று பாடுவோம் - என்றும்          வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம். கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் - நெஞ்சிற்          கவலை யிருளனைத்து நீங்கினோம். ‘அமிழ்தம், அமிழ்தம்’ என்று கூவுவோம் - நித்தம்          அனலைப் பணிந்துமலர் தூவுவோம். தமிழிற் பழமறையைப் பாடுவோம் - என்றுந்         தலைமை, பெருமை, புகழ் கூடுவோம். என நிறைவுபெறும் கவிதை ‘சொல்’

கதை
பா. செயப்பிரகாசம்,ஓவியங்கள்- கார்த்திகேயன்  

  இடையில் எட்டிப் பார்க்க முடியாதபடி ஒரு வருடம் கடந்துவிட்டது. நகரத்தில் முன்கூட்டி முழுவருட விடுமுறைக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுகிறார்கள். கிராமத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, இங்கு பள்ளிக்கூடம் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதை சீனிவாசன் கண்டான். இடதுகை மடிப்பில் மார்போடு தழுவிப் புத்தகக் கட்டு, அத்தனை லாவகமாய்ச் சுமையைப் பெண்ணால் மட்டுமே சுமக்க முடியும்; இந்த ஒரு சுமை மட்டும்தானா? எல்லாச் சுமைகளும் அவர்களைக் கழுத்து ஒடியச் செய்கின்றன என சீனிவாசன் நினைத்தான்.பள்ளி தொடங்கியிருந்தது. முதல்வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்புக்கு நீண்டு அகன்ற கண்மாய்க் கரை மேல் வந்தாள் சௌந்தரம். வெள்ளைச் சீருடை. சூரியோதயத்திலிருந்து பெயர்த்து வந்த ஒளித்தகடு போல் கரைமேல் தெரிந்தாள். சந்திப்பை சீனிவாசன்

கட்டுரை
என்னெஸ்  

  உலகப் புகழ்பெற்றவரான சிற்பி எஸ். நந்தகோபால் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தனது எழுபத்தியோராம் வயதில் சென்னையில் காலமானார். வழக்கமான தமிழ் ஊடக தர்மத்துக்கு ஊறு நேராத வகையில் அவரது மறைவு தபால்தலை அளவு புகைப்படத்துடன் சிலவரிச் செய்தியாக வெளியானது. வழக்கம்போல ஆங்கில நாளிதழ்கள் அவரது கலையையும் வாழ்வையும் குறித்து விரிவாக எழுதி அஞ்சலி செலுத்தின. வாழ்நாளில் பெரும் பகுதியையும் சென்னையில் செலவிட்டவர் நந்தகோபால் என்பதால் இந்த அக்கறையின்மை உறுத்துகிறது. இந்தியாவின் நவீன ஓவிய மரபுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது மெட்ராஸ் பள்ளி. நந்தகோபாலை மெட்ராஸ் பாணியின் சந்ததியாகவே குறிப்பிட வேண்டும். மெட்ராஸ் கலை வழிக்கு அடிகோலிய முன்னவர்களில் நந்தகோபாலின் தந்தையும் சோழ மண்டலம் ஓவிய கிராமத்தின் நிறுவனருமான

உள்ளடக்கம்