Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 149, மே 2012

 
 

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
தோழமை என்றொரு சொல்

ஒருங்கிணைப்பும் தொகுப்பும் கவிஞர் சேரன்
இந்தச் சிறப்பிதழில் எழுதியிருக்கும் சிங்கள எழுத்தாளர்களில் வெகுசிலரைத் தவிர ஏனையோர் நாடுகடத்தப்பட்டுவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் போலவே கனடாவிலும் ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் ஸ்விட்சர்லாந்திலும் தஞ்சம் புகுந்திருந்திருக்கிறார்கள்.

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

பாஷண அபேவர்த்தன
தமிழில்: மீராபாரதி

இவ்வாறான இனப் படுகொலையும் அழிப்பும் போர்க் குற்றங்களும் நடப்பது தொடர்பான சிறிதளவான அக்கறைகூடக் காட்டாமல் விட்டமையால், நாம் கூட்டுச் சமூகமாக இருக்கிறோம் என்பதைக் கூறுவதற் கான தார்மீக அடிப்படையைக் கூட நாம் இழந்துள் ளோம். எங்களுடைய குற்றவுணர்வானது எங்களது ஆன்மாவை முடமாக்கியுள்ளது. அது நமது ஆன்மாவை உள்ளிருந்தே அரிக்கிறது. ஒரு சிங்களவராக நான் பெற்ற அனுபவம் இதுதான்.

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கட்டுரை - முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்

ஜூட் லால் பெர்ணாண்டோ
தமிழில்: துஷி ஞானப்பிரகாசம்

இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது. இத்தகைய செயற் பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்.

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கட்டுரை - மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின்

சுனந்த தேசப்ரிய
“போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.”

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கட்டுரை - நம்பிக்கை தரும் மானுடக் கரிசனை

கார்டன் வைஸ்
தமிழில்: சேரன்

போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் மேலும் மேலும் வெளியாகும் தகவல்களும் இலங்கை அரசின் இறுமாப்புடன் கூடிய அலட்சியமும் இந்தியாவின் நிலைப் பாட்டைக்கூடச் சற்று மாற்றிவிட்டன.

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கவிதை

அஜித் ஹேரத்
மஞ்சுள வெடிவர்த்தன
மாலதி கல்பனா அம்புரோஸ்

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கட்டுரை - வெண்பனிபோல நீ வந்தாய்...

அரவிந்த பெரேரா
தமிழில்: ஃபஹீமா ஜஹான்

நீ எப்போதும் கூறியதைப் போன்ற கனவுகள் உனது வாழ்க்கையில் நிஜமாகப் போவதில்லையென்ற உண்மையை இப்போது நான் உணர்கிறேன். என்னிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தே இயக்கத்திலிருந்து வெளியேறினாய். தொலைந்துபோன வாழ்வைத் தேடியே நீ என்னிடம் வந்து சுருண்டு கொண்டாய், இறந்தகாலத்தைப் புதைக்கும் எண்ணத்துடனேயே நீ மறுபடியும் ஊருக்குத் திரும்பினாய்.

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கட்டுரை - முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான விடுதலை அரசியல்

பா. செயப்பிரகாசம்
“சிங்களருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத அதலபாதாளமான வேறுபாடுகள் உள்ளன. வெறுமனே பொருளாதார வளர்ச்சியாலோ சாதாரண அரசியல் சீர்திருத்தங்களாலோ சரிப்படுத்திவிட முடியும் என எண்ணுவது பிழையானது.’’

சிறுகதை:
மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்

சுரேஷ்குமார இந்திரஜித்
ஓவியங்கள்: செல்வம்

திடீரென அவர் நடையில் மாற்றம் தெரிந்தது. ஒரு பெண் அவருக்குள் புகுந்து கொண்டதைப் போலிருந்தது. நடை பெண் நடையாக மாறியது. உடலசைவுகள் பெண்ணுடையவை போல் மாறின. கழுத்தைச் சாய்த்துக் கண்களைச் சுழற்றி நாட்டியப் பெண்போலச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டே நடந்தார்.

கட்டுரை:
படிவார்ப்புகள் சிதைந்த கதை

சச்சிதானந்தன் சுகிர்தராஜா
அந்தத் தூரத்திலும் ஸ்டிவ் என்னைக் கண்டுகொண்டான். என்னைப் பார்த்துக் கை அசைத்துக்கொண்டு ‘பாசிசம் ஒழிக’ என்று அவனுடன் நின்றவர்களுடன் சேர்ந்து கத்தினான். நானும் அவனை அடையாளம் கண்டுகொண்டதுபோல் என் கையை வீசியவாறே ‘பாசிசம் ஒழிக’ என்று கத்தினேன்.

கட்டுரை:
மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை

அனிருத்தன் வாசுதேவன்
பாலியல் தொழில் குறித்த உணர்வுகளும் மதிப்பீடுகளும் இருக்கும் நிலையில், தாங்கள் பாலியல் தொழில் செய்வதைப் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து மறைத்துவைக்கிறார்கள்.

மலையாளச் சிறுகதை:
பைத்தியம்

சி. அய்யப்பன்
தமிழில்: சுகுமாரன்

காரில் உட்கார்ந்து கூப்பாடு போடும் சகோதரியைப் பார்த்தும் ‘ஒன்றும் தெரியவில்லையே’ என்று நான் சொன்னபோது ஆச்சரியமும் வேதனையும் நிரம்பிய குரலில் எனது பால்ய நண்பரான நீங்கள் இப்படிக் கேட்டிருக்கவே மாட்டீர்கள்: “கிருஷ்ணன் குட்டி, உனக்கும் பைத்தியமா?” எனக்கு எந்தக் கோளாறுமில்லை என்று இப்போதாவது தெளிவாகியிருக்குமே.

மதிப்புரை:
வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு)
ரேவதி: ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்

பழ. அதியமான்

பதிவு:
முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்

களந்தை பீர்முகம்மது

பதிவு:
தமிழில் மூன்றாம் எழுத்தியக்கம்

கண்ணன்

பதிவு: அற்றைத் திங்கள், 22 ஜனவரி, 2012
இன்னொரு மாலை

ஆத்மார்த்தி

அஞ்சலி: சண்முகம் சிவலிங்கம் (1939-20.04.2012)

தலையங்கம்